புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய வாகன உற்பத்தியாளர்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ம் தற்போது இணைந்திருக்கின்றது. அண்மையில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டன. இவற்றின் வரிசையிலேயே தற்போது டாடா மோட்டார்ஸ் இணைந்துள்ளது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

ஆமாங்க, டாடாவும் அதன் புதிய கார்களின் விலையை உயர்த்துவதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம், அதன் தயாரிப்புகளின் விலையை 1.1 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்திருக்கின்றது. இந்த விலை உயர்வு நிறுவனத்தின் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதனால், இந்திய வாகன பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

விலை உயர்வு இன்று முதலே (ஏப்ரல் 23) அமலுக்குக் கொண்டு வரப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், அனைத்து கார் மாடல்களின், அனைத்து வேரியண்டுகளின் விலையும் தற்போது உயர்ந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையை புதுமுக வாகனங்களைக் கொண்டு அலங்கரிக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

இதன் அடிப்படையில் சமீபத்தில் ஓர் புதிய கர்வ் எனும் கான்செப்ட் மாடலை அது காட்சிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விரைவில் மற்றுமொரு புதிய தயாரிப்பையும் அது வெளியீடு செய்ய இருக்கின்றது. வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்றே வெளியீடு நிகழ்வு அரங்கேற இருக்கின்றது. இந்த நிகழ்விற்கு ஊடகங்களுக்கு நிறுவனம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

மேலும், அப்புதிய காரை உலகளவில் வெளியீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய வாகனங்களை மட்டுமே இந்தியாவில் புதிய (அதிக) விலையில் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தையும் டாடா கொண்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது அனைத்து பயணிகள் கார் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வால் டாடா டியாகோ தொடங்கி டாடா சஃபாரி வரை அனைத்தின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதனால் நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலான டியோகவின் ஆரம்ப விலை ரூ. 5.22 லட்சமாக மாறியுள்ளது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

இது மும்பை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதேபோல் நிறுவனத்தின் பிற கார் மாடல்களான பஞ்ச், டிகோர், டிகோர் இவி, அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய அனைத்து கார் மாடல்களின் ஆரம்ப விலையும் உயர்ந்துள்ளன.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

டாடா மோட்டார்ஸ் தற்போது நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை அப்கிரேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த காரை வெகு விரைவில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு மிக சிறப்பான வரவேற்பு நிலவி வருகின்றது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

இந்த வரவேற்பை சற்று அதிகரிக்க செய்யும் வகையில் இக்காரை நிறுவனம் அப்கிரேட் செய்து வருகின்றது. அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிக கவர்ச்சியான வாகனமாக அதனை மாற்றும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகின்றது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியில் 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதைக் காட்டிலும் கூடுதல் ரேஞ்ஜ் தரும் வாகனமாகவே நெக்ஸான் இவி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

நெக்ஸான் இவியில் 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கையே டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தி வருகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது, ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

எக்ஸ்எம், எக்ஸ்இசட்-ப்ளஸ், எக்ஸ்இசட்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் ஆகிய வழக்கமான தேர்வுகளிலும், எக்ஸ்இசட்-ப்ளஸ் டார்க் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் டார்க் ஆகிய சிறப்பு பதிப்புகளிலும் நெக்ஸான் இவி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை தற்போது விலை உயர்வால் ரூ. 14.54 லட்சமாக உயர்ந்துள்ளது.

புது கார் வாங்குற எண்ணமே போய்டும் போலிருக்கு... டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை அதிரடி உயர்வு! இவ்ளோ ஏறிடுச்சா?

இதுபோல் எந்தெந்த கார் மாடல் என்னென்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பதை பட்டியலாகக் கீழே பார்க்கலாம். அனைத்தும் புதிய விலைகள் ஆகும்.

மாடல் விலை உயர்வு
Tata Tiago ₹5.22 Lakh - ₹7.67 Lakh
Tata Punch ₹5.67 Lakh - ₹9.48 Lakh
Tata Tigor ₹5.82 Lakh - ₹8.44 Lakh
Tata Tigor EV ₹12.24 Lakh - ₹13.39 Lakh
Tata Altroz ₹6.00 Lakh - ₹10.00 Lakh
Tata Nexon ₹7.42 Lakh - ₹13.73 Lakh
Tata Nexon EV ₹14.54 Lakh - ₹17.15 Lakh
Tata Harrier ₹14.52 Lakh - ₹21.81 Lakh
Tata Safari ₹15.02 Lakh - ₹23.30 Lakh

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2022, 18:56 [IST]
English summary
Tata announces 1 1 percent price hike entire passenger vehicle range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+