டாடா கார் பிரியர்களுக்கு குட் நியூஸ்... இந்த கார்களை எல்லாம் இப்போ கம்மி ரேட்ல வாங்கலாம்...
டாடா நிறுவனம் தனது கார்ளுக்கு ரூ60 ஆயிரம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது குறித்த தெளிவான முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தனது கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு ஜூன் 2022க்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன் படி கார்பரேட் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் ஆகிய தள்ளுபடிகள் அந்நிறுவனத்தின் டியாகோ, டிகோர், நெக்ஸான், சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ60 ஆயிரம் வரை இந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஆல்ட்ராஸ், பஞ்ச், நெக்ஸான் இவி, டிகோர் இவி ஆகிய கார்களுகு்கும், டிகோர் மற்றும் டியாகோ கார்களின் சிஎன்ஜி வேர்ஷன் கார்களுக்கும் எந்த விதமான தள்ளுபடிகளும் அறிவிக்கப்படவில்லை. வாருங்கள் ஒவ்வொரு காருக்கும் எவ்வளவு தள்ளுபடி எந்தெந்த வகையில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது எனக் காணலாம் வாருங்கள்

டாடா ஹாரியர்
டாடா நிறுவனத்தின் ஹாரியர் காருக்கு அதிகபட்சமாக ரூ60 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக அதிகபட்சம் ரூ40 ஆயிரம் வரையிலும், கார்பரேட் தள்ளுபடியாக ரூ20 ஆயிரம் வரையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹாரியர் கார் எம்ஜி ஹெக்டேர், ஹூண்டாய் க்ரெட்டா, மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக வருகிறது. இந்த கார் 170 எச்பி 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வருகிறது.

டாடா சஃபாரி
டாடா நிறுவனம் 3 வரிசை சீட்கள் கொண்ட டாடா சஃபாரி கார்களுக்கு ரூ40 ஆயிரம் வரையிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு ரூ40 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு கார்பரேட் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 170 எச்பி பவர் கொண்ட 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் விற்பனையாகிறது.

டாடா டியாகோ
டாடா நிறுவனத்தின் சிறிய கார் இந்த டியாகோ, இது மார்கெட்டில் உள்ள மாருதி சுஸூகி வேகன்ஆர் காருக்கு போட்டியாக என்டரி லெவல் காராக விற்பனையாகிறது. இந்த காரில் 86 எச்பி 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் பாதுகாப்பு, வசதி நிறைந்த, மற்றும் சிறப்பான பயன்பாடு கொண்ட காராக இருக்கிறது. இந்த காரின் XE, XM மற்றும் XT வேரியன்ட்களுக்கு ரூ21,500 வரையிலும் XZ வேரியன்ட்களுக்கு ரூ31500 வரையிலும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜின வேரியன்ட்களுக்கு எந்த விதமான தள்ளுபடிகளும் இல்லை.

டாடா டிகோர்
டாடா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைவான செடான் காராக டிகோர் கார் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மாருதி சுஸூகி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களுக்கு போட்டியாக வருகிறது. இந்த காருக்கும் டியாகோ காரை போல ரூ31 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி XE மற்றும் XM வேரியன்ட்களுக்கு ரூ21,500 தள்ளுபடியும், XZ வேரியன்டிற்கு கூடுதலாக ரூ10,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களுக்கு சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு தள்ளுபடிகள் இல்லை.

| Tata Motors Discounts - June 2022 | ||
| Model | Cash Discount | Exchange bonus + corporate discount |
| Tata Tiago (except i-CNG) | ₹10,000 (XZ trim and above) | ₹10,000 + ₹3,000 |
| Tata Tigor (except i-CNG) | ₹10,000 (XZ trim and above) | ₹10,000 + ₹3,000 |
| Tata Nexon | - | 0 + up to ₹5,000 |
| Tata Harrier | - | ₹40,000 + ₹5,000 |
| Tata Safari | - | ₹40,000 |

டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் கார் டிசைன், டிரைவிங் அனுபவம், பாதுகாப்பு, கேபின் வசதி எனப் பல வகையில் சிறந்த காராக இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி, கியா சோனட், ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் க்ரூஷர் மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக வருகிறது. இந்த கார் 120 எச்பி 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 110 எச்பி 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வருகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட்களுக்கு ரூ6000 வரையிலும், டீசல் வேரியன்ட்களுக்கு ரூ10,0000 வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இவி வேரியன்டகளுக்கு எந்த வித தள்ளுபடிகளும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications