ஏற்கனவே டப்பா டான்ஸ் ஆடுது... இதுல இது வேறையா! டாடாவின் அதிரடி அறிவிப்பால புது கார் வாங்குற எண்ணமே போச்சு!

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கும் அதிரடி அறிவிப்பால் புதிதாக கார் வாங்க திட்டம் போட்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். நிறுவனங்கள் பல வேலையாட்களை வெளியேற்றி வரும்நிலையில் டாடா இந்த எதிர்பார்த்திராத தகவலை வெளியிட்டுள்ளது. அப்படி என்ன அறிவிப்பு அது என்பது பற்றிய விபரத்தைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் எடுத்திருக்கும் அதிரடி முடிவால் இந்தியர்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். குறிப்பாக, புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களை டாடாவின் அறிவிப்பு மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும் என கூறலாம். "அப்படி என்ன நடவடிக்கைங்கனு தானே கேக்குறீங்க.." வேற ஒன்னும் இல்லைங்க டாடா 2023 புத்தாண்டு கிஃப்டாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வை பரிசாக வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டாடா

ஆம், நிறுவனம் வெகு சீக்கிரமே தனது புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த அதிர்ச்சியின் தாக்கம் குறைவதற்கு முன்னதாக டாடா மோட்டார்ஸும் அதன் பங்காக விலை உயர்வு பற்றிய தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

குறிப்பாக, புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களை அவர்களின் பிளானையே மாற்ற செய்யும் வகையில் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. நிறுவனம் அடுத்து ஆண்டு முதல் வாகனத்தின் விலையை உயர்த்த இருக்கின்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றது. அந்த நேரத்திலும் மேலும் கணிசமான அளவு புதிய வாகனங்களின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இதற்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ் உட்பட சில முன்னணி நிறுவனங்கள் விலை உயர்வைச் செய்ய இருப்பதாக அறிவித்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முதன்மையானதாக வாகன கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதே இருக்கின்றது. இந்த காரணத்தினாலேயே மாருதி சுஸுகியும் அடுத்த மாதம் முதல், அதாவது, 2023 ஜனவரி முதல் விலை உயர்வை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இதே காரணத்தை முன் நிறுத்தி டாடா மோட்டார்ஸும் அதன் புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுவும் ஜனவரி 2023 முதல் விலையை உயர்த்த இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ஐசிஇ (பெட்ரோல் மோட்டார்) கொண்ட வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் ஆகிய இரண்டின் விலையும் உயர இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த தகவல் ஒட்டுமொத்த டாடா கார் பிரியர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக புதிய ஆண்டை முன்னிட்டு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த தகவல் பெருத்த ஷாக்காக அமைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தற்போது பஞ்ச், டிகோர், டியாகோ, நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர நெக்ஸான் இவி (மேக்ஸ் மற்றும் பிரைம் ஆகிய இரு வெர்ஷன்களில் இது விற்கப்பட்டு வருகின்றது), டியாகோ இவி, டிகோர் இவி ஆகிய கார் மாடல்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் விலையே அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உயர இருக்கின்றது. எவ்வளவு உயர்த்தப்படும் என்கிற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இப்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி பெருந்தொகை உயர்த்தப்படலாம் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பேட்டரியின் விலைகள் உட்பட பல முக்கிய கூறுகளின் விலை உயர்ந்துக் காணப்படுகின்றது. ஆகையால், புதிய கார்களின் விலை பெருத்த உயர்வைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடாவின் கார்களுக்கு அண்மைக் காலங்களாக வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வு எனும் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது.

இதன் நிறுவனத்திற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை லேசாக பாதிக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே, ஒரு பக்கம் நிறுவனங்கள் பணி ஆட்களை வேலையில் வெளியேற்றும் வருகின்றன. இதனால் வேலையை இழப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். எனவே, இந்த செயல் புதிய வாகனங்களின் விற்பனையில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tata announces price hike 2023 january
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X