நடக்க கூடாதது நடந்துருச்சு... யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட டாடா... திடீர்னு இப்படி ஆயிருச்சே!
யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டியாகோ, டிகோர், பன்ச், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதுதான் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் டிசைனில் அசத்துவதுடன், ஏராளமான வசதிகளையும் பெற்றுள்ளன. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கு சரியான விலையையும் நிர்ணயம் செய்கிறது.

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமான கார் நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. இப்படி பல்வேறு விதங்களிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்யும் அதிரடி அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் நவம்பர் 7ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''மாடல் மற்றும் வேரியண்ட்டை பொறுத்து, கார்களின் விலை சராசரியாக 0.9 சதவீதம் உயரும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், விலைகளை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2022ம் ஆண்டில் கார்களின் விலையை உயர்த்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஜனவரி, ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு முறை விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நெக்ஸான் காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரானது, நெக்ஸான் காரின் மிக முக்கியமான போட்டியாளர் ஆகும். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் நெக்ஸான் காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. இதுதவிர பல்வேறு கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் நெக்ஸான், டிகோர் மற்றும் டியாகோ கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது. இதில், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக பன்ச் மற்றும் அல்ட்ராஸ் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தற்போதைய நிலையை போலவே, எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். உலகம் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதால், இன்னும் பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








