மக்களுக்கு எது நல்லதுனு தெரிய ஆரம்பிச்சிருச்சு... இனி டாடாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!

டாடா மோட்டார்ஸின் அக்டோபர் மாத விற்பனை நிலவரத்தையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

வாடிக்கையாளர்கள் மீது அதிக அக்கறையுடன் செயல்படும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸும் ஒன்று. இதற்கு நிறுவனத்தின் கார்களே மிகப் பெரிய சான்று. கார்கள் எப்படி அக்கறைக்கு சான்றாகும் என கேட்கின்றீர்களா, நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்பும் அதிக உறுதியான கட்டுமானத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

டாடா கார்

அதாவது, விபத்து போன்ற அசம்பாவதிங்களின் போது போதுமான பாதுகாப்பை வழங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே பல உயிர்களை பெரும் ஆபத்தான விபத்துகளின்போது டாடாவின் தயாரிப்புகள் காப்பாற்றியிருக்கின்றன. இத்தகைய திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மேலும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக டாடா கார் மாடல்கள் சில விற்பனை வளர்ச்சியைப் பெற்ற வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, டாடா டியாகோ கார் மாடலுக்கு நம்ப முடியாத வரவேற்பு இந்தியாவில் கடந்த மாதத்தில் கிடைத்திருக்கின்றது. அதீத விற்பனை வளர்ச்சியை கடந்த 2022 அக்டோபரில் அது பெற்றிருக்கின்றது.

2021 அக்டோபரில் வெறும் 1,377 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில், நடந்து முடிந்த 2022 அக்டோபரில் 7,187 யூனிட்டுகள் வரை டியாகோ விற்பனையாகியுள்ளது. இது 421.9 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கையாகும். அதேவேலையில் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக நெக்ஸான் இருக்கின்றது.

இந்த கார் 36.3 சதவீதம் விற்பனை வளர்ச்சியைக் கடந்த மாதத்தில் பெற்றிருக்கின்றது. 13,767 யூனிட்டுகள் வரை நெக்ஸான் கார் மாடல் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. இந்தியாவின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல்களில் நெக்ஸானும் ஒன்று என்பது குறிப்பிடத்தககுந்தது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் டாடாவின் பஞ்ச் கார் இருக்கின்றது.

இந்த மைக்ரோ எஸ்யூவி கார் 2022 அக்டோபரில் 10,982 யூனிட்டுகள் வரை விற்பனயாகியுள்ளன. விற்பனைக்கு அறிமுகமான ஒரு சில மாதங்களிலேயே மிக வேகமாக பிரபலமடைந்த டாடா கார் இதுவாகும். இவற்றை போலவே நிறுவனத்தின் பிற கார் மாடல்களான டிகோர், சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

ஆனால், ஹாரியர் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரு கார் மாடல்கள் மட்டும் விற்பனையில் பின் தங்கியிருக்கின்றன. ஆம், 2021 அக்டோபரைக் காட்டிலும் கணிசமான விற்பனை இழப்பை இவை சந்தித்துள்ளன. இதுகுறித்த விபரத்தை பட்டியலில் கீழே காணலாம்.

வரிசை எண் மாடல்களின் பெயர் அக்டோபர் 2022 அக்டோபர் 2021 விற்பனை வளர்ச்சி விகிதம் (%) YoY
1 நெக்ஸான் 13,767 10,096 36.36
2 பஞ்ச் 10,982 8,453 29.92
3 டியாகோ 7,187 1,377 421.93
4 அல்ட்ராஸ் 4,770 5,128 -6.98
5 டிகோர் 4,001 1,377 190.56
6 ஹாரியர் 2,762 3,097 -10.82
7 சஃபாரி 1,751 1,735 0.92
Article Published On: Friday, November 18, 2022, 14:29 [IST]
English summary
Tata cars sales report october 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+