சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்! அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவநம் அதன் டியாகோ என்ஆர்ஜி கார் மாடலில் சிஎன்ஜி தேர்வை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் வாகனங்களாக சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. இதன் விளைவாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் அதிகளவில் சிஎன்ஜி வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

அந்தவகையில், டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே தனது நிறுவனத்தின்கீழ் பல தரபட்ட சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றநிலையில், தற்போது, மேலும் ஓர் புதுமுக சிஎன்ஜி கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் சார்பில் ஓர் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

அந்த டீசரின் வாயிலாக நிறுவனம் புதுமுக சிஎன்ஜி வாகனம் அறிமுகம் செய்யப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான டியாகோ என்ஆர்ஜி மாடலிலேயே புதிய சிஎன்ஜி விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. டியாகோவின் வழக்கமான பதிப்பைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக டியாகோ என்ஆர்ஜி விளங்குகின்றது.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

லேசான கிராஸோவர் அம்சங்களைப் பெற்றதாக இந்த என்ஆர்ஜி டியாகோ காட்சியளிக்கின்றது. எனவேதான் இந்த வாகனத்திற்கு தற்போதும் தனித்துவமான டிமாண்ட் சந்தையில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய வெர்ஷனிலேயே தற்போது டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

இந்த வாகனம் டியாகோ என்ஆர்ஜி ஐசிஎன்ஜி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இவ்வாகனத்தை இந்தியாவின் முதல் டஃப் ரோடுகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட சிஎன்ஜி வாகனமாக டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவலையும் தனது டீசர் வாயிலாக டாடா உறுதிப்படுத்தியுள்ளது.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

டியாகோ என்ஆர்ஜி ஐசிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் பெட்ரோலில் இயங்கும் போது 84.82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதேவேலையில், சிஎன்ஜியில் இயங்கும்போது 72.39 பிஎச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் எனும் குறைவான திறன்களையே வெளியேற்றும்.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

அதேவேலையில், இந்த காரை பிற சிஎன்ஜி வாகனங்களைப் போலவே டாடா மோட்டார்ஸ் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைத்திருக்கின்றது. 35 லிட்டர் ஃப்யூவல் டேங்கும், 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிண்டரும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த சிலிண்டரில் 10 கிலோ வரை எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு இந்த வாகனம் 26.49 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என கூறப்படுகின்றது. சாமானியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக அதிக மைலேஜ் திறன் இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பை டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி நிறைவேற்றும் என்பது இப்போதே தெரிகின்றது. இக்காரின் விலை பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

இதனை ரூ. 7.39 லட்சம் தொடங்கி ரூ. 7.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், பெரியளவில் மாற்றங்கள் இன்றி கணிசமான மாற்றங்களைக் கொண்டதாகவும் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. அந்தவகையில், சிஎன்ஜி பேட்ஜ், புதிய அலங்கார அம்சங்கள் சிலவும் டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி எதிர்பார்க்கப்படுகின்றது.

சாமானியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேத்தும்... அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் டாடா!

டாடா மோட்டார்ஸ் அதன் வழக்கமான டியாகோவில் ஏற்கனவே சிஎன்ஜி தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றது. எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் டிடி என ஐந்து விதமான தேர்வுகளில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதில் ஆரம்ப நிலை தேர்வாக இருக்கும் எக்ஸ்இ ரூ. 6.34 லட்சம் என்கிற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி தேர்வுகளை மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே விற்பனைக்கு வழங்குகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 12, 2022, 10:52 [IST]
English summary
Tata confirms tiago nrg icng
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+