மொத்தம் 5 கார் வத்துச்சுன்னா 3 பேர் இந்த காரை தான் வாங்குறாங்க...டாடா கார்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?
டாடா நிறுவனம் எலெக்டரிக் வாகன செக்மெண்டில் மொத்தம் 90 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ள நிலையில் தற்போது விற்பனையாகும் டாப் 5 கார்களில் 3 கார்கள் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனையாகிறது இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் எலெக்டரிக் வாகன செக்மெண்டிற்குள் அடியெடுத்து வைத்து தற்போது சிறப்பான விற்பனையைச் செய்து வருகிறது. இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய 2 கார்கள் தான் ஒட்டு மொத்த பயணிகள் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்டிலேயே 90 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. இது கடந்தாண்டை விட 10 சதவீதம் வளர்ச்சியாகும். இந்த 90 சதவீதம் என்பது இந்தாண்டு ஜனவரி துவங்கி 9 மாதங்கள் வரையிலானது.

இந்நிலையில் கடந்த மாதம் டாடா நிறுவனம் டியாகோ இவி என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரை அந்நிறுவனம் ஜனவரி மாதத்தில் விற்பனைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரும் வந்துவிட்டால் இவி செக்மெண்டில் டாடா கிங் ஆக மாறிவிடும்.

கடந்த 9 மாதத்தில், டாடா நிறுவனம் மொத்தம் 30 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய கார்களை சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.

இதில் நெக்ஸான் இவி மட்டும் மொத்தம் 21,997 கார்கள் விற்பனையாகியுள்ளன. டிகோர் இவியை பொருத்தவரை மொத்தம் 7903 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதில் நெக்ஸான் இவி மொத்தம் 66 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது. டிகோர் இவி 24 சதவீதம் வகித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக மார்கெட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஸிஎஸ் இவி கார் இருக்கிறது. இந்த கார் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் 7 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது.

இந்தாண்டு மொத்தம் எம்ஜி ஸிஎஸ் கார் மொத்தம் 2418 கார்கள் விற்பனையாகியுள்ளது. டாடாவிற்கு அடுத்து எம்ஜி நிறுவனம் இருக்கிறது. அடுத்ததாக 3வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. 4வது இடத்தில் மஹிந்திரா 5 இடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. கடந்த 9 மாத விற்பனையில் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் இது தான்.

இதன்படி பார்த்தால் இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு 5 எலெக்ட்ரிக் கார்களிலும் 4 எலெக்ட்ரிக் கார் டாடா நிறுவனத்தின் கார்கள் தான். அதில் 3 எலெக்ட்ரிக் கார் நெக்ஸான் இவி கார் தான். இது டாடா நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் ஆரம்பத்திலேயே டாடா நிறுவனம் கொடி கட்டி பறக்கத் துவங்கிவிட்டது என்று தயங்காமல் சொல்லலாம்.

தற்போது 9 மாதத்தில் 30 ஆயிரம் இவி கார்களை விற்பனை செய்து டாடா நம்பர் ஒன் இடத்திலிருந்தாலும் இந்நிறுவனத்துடன் போட்டி போட பல நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மார்கெட்டில் விரைவில் பல எலெக்ட்ரிக் கார்கள் களம் இறங்கத் தயாராகவுள்ளன. பிஓய்டி அட்டோ 3, மஹிந்திரா எக்ஸ்யூவி 400, ஹூண்டாய் ஐகானிக் 5 உள்ளிட்ட பல கார்கள் அறிமுகத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

இது போக மார்கெட்டில் கியா இவி6, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் ஆகிய கார்கள் இந்தாண்டு களம் இறங்கியுள்ளன. இனி என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








