மாருதி முதல் இ-காரை களமிறக்கினாலும் டாடா இடத்தை நெருங்க முடியாது! வேற லெவல் பிளான்ல காய நகர்த்திட்டு இருக்கு!

இந்திய மின் வாகன சந்தையில் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டு இருக்கின்றது. மாருதி சுஸுகி அதன் முதல் மின்சார வாகனத்தை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தாலும், தற்போது டாடா நிறுவனம் பிடித்துள்ள இடத்தை அதனால் பிடிக்குமா என்பது கேள்விக் குறியே. ஏனெனில், மிக அதீத வரவேற்பையே டாடா நிறுவனத்தின் மின் வாகனங்களுக்கு இந்திய சந்தையில் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ' .இவி ' (.EV) எனும் புதிய பிராண்டை பிரத்யேகமாக மின்சார வாகனங்களுக்காக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதுக் கிடைத்துக் கொண்டிருக்கு வரவேற்பை இரட்டிப்பாக்க இந்த தனி பிராண்ட் பெரும் உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்புகின்றது. தனிக் கவனம் இந்த பிராண்டில் செலுத்தப்பட்டு அதிகப்படியான மின்சார வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, அதன் மின்சார கார்களை இ-ட்ரான் பிராண்டின்கீழ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுபோலவே தனி பிராண்ட் வாயிலாக டாடா மோட்டார்ஸ் அதன் எதிர்கால மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கும் என தெரிகின்றது. .இவி நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான துணை பிராண்டாக இருக்கும் என நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் சேவை ஆகிய பிரிவுகளின் தலைவர் விவேக் ஸ்ரீவத்சா உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஆட்டோகார் இந்தியாவிடம் அளித்த நேர்காணல் ஒன்றிலேயே இந்த தகவலை அவர் உறுதிப்படுத்தினார். ஏற்கனவே, டாடா மோட்டார்ஸ் இந்த பெயரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் நெக்ஸான் இவி, டியாகோ இவி மற்றும் டிகோர் இவி எனும் பெயரில் அதன் எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவையே இப்போதைய நிலவரப்படி டாடா நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களாகும்.

இவற்றின் வரிசையில் இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விரைவில் சேர்க்கப்பட இருக்கின்றன. இதற்காக மிகப் பெரிய திட்டத்தையே நிறுவனம் வகுத்து வைத்துள்ளது. நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 வகையான எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தைப் போட்டிருக்கும் அதேவேளையிலேயே .இவி எனும் புதிய துணை பிராண்ட் பற்றிய தகவவை டாடா மோட்டார்ஸின் மூத்த அதிகாரி வெளியிட்டுள்ளார்.

நிறுவனத்தின் வரவிருக்கும் மின்சார கார்களும் டியாகோ இவி போல் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரே டியாகோ இவி. இந்த மின்சார கார் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்இ (XE), எக்ஸ்டி (XT), எக்ஸ்இசட் பிளஸ் (XZ+), எக்ஸ்இசட் பிளஸ் டெக் லக்ஸ் (XZ+ Tech LUX) ஆகியவையே அவை ஆகும்.

ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதன் டெலிவரி பணிகள் வரும் 2023 ஜனவரியிலேயே தொடங்கப்பட இருக்கின்றது. டியாகோ இவி-யை இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். 19.2 kWh மற்றும் 24 kWh ஆகிய இரு பேட்டரி பேக் தேர்வுகளிலேயே அது கிடைக்கும். 19.2 kWh பேட்டரி பேக் தேர்வை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ ரேஞ்ஜையும், 24 kWh பேட்டரி பேக்கில் ஃபுல் சார்ஜில் 315 கிமீ ரேஞ்ஜையும் பெற முடியும்.

இந்த இரு பேட்டரி பேக் தேர்வுகளிலும் 74 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வெறும் 5.7 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. அறிமுகமாக டியாகோ இவி-க்கு ரூ. 8.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் காரே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும்.

இருப்பினும், டாடாவின் மற்றுமொரு தயாரிப்பிற்கே நாட்டு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நெக்ஸான் இவி காருக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரை நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில், நெக்ஸான் இவி மேக்ஸ் ஓர் ஃபுல் 437 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். நெக்ஸான் இவி பிரைம் மாடலில் ஓர் ஃபுல் சார்ஜில் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களுக்கு இந்த மின்சார காருக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2022, 19:25 [IST]
English summary
Tata electric sub brand ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+