மக்கள் மட்டுமல்ல... டாடா மின்சார கார்களை வாங்கி குவிக்கும் மாநில அரசு! 65 கார்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க
குறிப்பிட்ட ஓர் மாநில அரசு மிக அதிக எண்ணிக்கையில் டாடா மின்சார கார்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. மக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசு துறைகளிடத்திலும் டாடாவின் மின் வாகனங்களுக்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரள அரசு, ஒட்டுமொத்தமாக 65 டாடா மின்சார கார்களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கேரள மோட்டார் வாகன துறை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மேலும் ஓர் துறையின் பயன்பாட்டிற்காக இந்த கார்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவின் மின்சார துறைக்காகவே இந்த மிகப் பெரிய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 60 டாடா டிகோர் இவி-யும், 5 டாடா நெக்ஸான் இவி-க்கும் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கேரளாவை கார்பன் (பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு) இல்லா மாநிலமாக மாற்றும் முயற்சியில் மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 2030ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் அது செயல்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் ஒரு பங்காகவே கேரள அரசு தனது அரசு துறைகளில் மின் வாகனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்து வருகின்றது. அதேவேலையில், தனது குடிமக்களையும் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் பெரும் கொள்முதலுக்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸுக்கு கேரளா வழங்கியிருக்கின்றது. கேரளா ஆர்டர் செய்திருக்கும் இரு மின்சார கார்களும் மிக சிறந்த எலெக்ட்ரிக் வாகனங்களாக இந்திய மின் வாகன சந்தையில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

எனவேதான் மக்கள் மத்தியில் இவற்றிற்கு மிக சிறப்பான வரவேற்பு நிலவி வருகின்றது. இதில், அதிக எண்ணிக்கையில் ஆர்டரைப் பெற்றிருக்கும் டாடா டிகோர் இவி, இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும். இது, ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அராய் வெளியிட்ட தகவலின்படி, ஒற்றை முழுமையான சார்ஜில் இந்த மின்சார கார் 306 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இக்காரில் 26 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 15A வீட்டு சார்ஜர் சாக்கெட்டில் வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜாக 8.5 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதுவே, 55kW திறன் கொண்ட சாக்கெட்டில் வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 60 சதவீதம் சார்ஜாக 5.7 செகண்டுகளே போதும்.

இக்காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். மிக சிறப்பான மின்சார வாகனமாக இது இருக்க வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ் இக்காரில் ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கின்றது. இதைப் போலவே மிகுந்த அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் காராக நெக்ஸான் இவி காட்சியளிக்கின்றது.

இந்த காரில் சற்று சிறப்பு வசதிகள் கூடுதல் என்றே கூறலாம். இது ஒற்றை முழுமையான சார்ஜில் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 129 பிஎஸ் திறனை வெளியற்றக் கூடிய நிரந்தர மேக்னட் ஏசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், ரிமோட் கன்ட்ரோல், டிராக்கிங், ஓட்டுநரின் நடத்தைகளை கண்டறிதல், நேவிகஷன் உள்ளிட்ட 35 விதமான மொபைல் இணைப்பு அம்சங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்று பன்முக சிறப்பு வசதிகளை இரு டாடா மின்சார கார்களும் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் மிக சிறந்த எலெக்ட்ரிக் கார்களாக இவை காட்சியளிக்கின்றன.

எனவேதான் இந்திய எலெக்ட்ரிக் கார் பிரியர்கள் மத்தியில் டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகிய இரு மின்சார வாகனங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகின்றது. டாடா மோட்டார்ஸ், வாடகை துறை மற்றும் தனி நபர் பயன்பாடு என இரு பிரிவுகளிலும் தன்னுடைய இ-வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








