ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

டாடா ஹாரியர் காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

இந்திய சந்தையில் டாடா ஹாரியர் கார் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்திருந்தாலும் ஆரம்பத்தில் இதன் விற்பனை மிகவும் மந்தமாகதான் இருந்தது. ஆனால் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தபோது, 2020ம் ஆண்டில் ஹாரியர் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தியது.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

அப்போது டாடா ஹாரியர் காரின் இன்ஜின் சக்தி மேம்படுத்தப்பட்டதுடன், ஒரு சில வசதிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டன. இந்த மாற்றங்களை தொடர்ந்து, டாடா ஹாரியர் காரின் விற்பனை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2021ம் ஆண்டில் டாடா நிறுவனம் 28,038 ஹாரியர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு டாடா நிறுவனம் வெறும் 14,071 ஹாரியர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் டாடா ஹாரியர் காரின் வருடாந்திர விற்பனையானது 99.26 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது டாடா ஹாரியர் காரின் விற்பனை கிட்டத்தட்ட அப்படியே இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

இதன் மூலம் கடந்த 2021 காலாண்டர் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் ஹாரியர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் டியாகோ கார்கள் பிடித்துள்ளன. டாடா ஹாரியர் காரில், 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டி8 பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒமேகா பிளாட்பார்மை தழுவி டாடா ஹாரியர் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

இந்த பிளாட்பார்ம்மில் ஆல் வீல் டிரைவ் கார்களையும் உருவாக்க முடியும். அத்துடன் எலெக்ட்ரிக் கார்களையும் தயாரிக்க முடியும். ஆனால் டாடா ஹாரியர் கார், ஃப்ரண்ட் வீல் டிரைவ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும் டாடா ஹாரியர் காரில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

டாடா ஹாரியர் காரின் டாப் வேரியண்ட்டில், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், ரியர் பார்க்கிங் கேமரா, பனரோமிக் சன்ரூஃப், 8.8 இன்ச் இன்போடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் (7 இன்ச் எம்ஐடி உடன்), 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் (டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜெஸ்ட் உடன்) ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

மேலும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் டாடா ஹாரியர் காரில் இன்னமும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை. தற்போதைய நிலையில் டாடா ஹாரியர் காரின் ஆரம்ப விலை 14.40 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 21.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதில், டார்க் எடிசனின் விலையும் அடங்கும்.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

இவை டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன் டாடா ஹாரியர் போட்டியிட்டு வருகிறது. இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

இந்த இன்ஜின் வெகு விரைவில் டாடா ஹாரியர் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய சஃபாரி காரிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த இன்ஜின் தேர்வை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது.

ஆரம்பத்துல ரொம்ப டல்லா இருந்துச்சு... ஆனா டாடா ஹாரியர் காரின் விற்பனை இப்போ வேற லெவல்... ஏன் தெரியுமா?

இதற்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய மூன்று கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதுபோன்ற காரணங்களால் டாடா கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

Most Read Articles
English summary
Tata harrier 2021 sales report
Story first published: Friday, January 7, 2022, 20:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X