டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

2022 ஜபிஎல் கிரிக்கெட் போட்டியை டார்க்கெட் செய்து கொண்டுவரப்படும் டாடா கஸிரங்கா எஸ்யூவி கார்களை தொடர்ந்து, அவற்றின் சில ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களும் சூடான காற்றை வழங்கக்கூடிய இருக்கைகளை பெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

ஸ்பெஷல் எடிசன் கார்களை விற்பனைக்கு கொண்டுவருவதை மிகவும் விரும்பக்கூடிய நிறுவனம் டாடா மோட்டார்ஸ் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக பண்டிகை காலங்களில் புதிய சிறப்பு பதிப்பு கார்களை அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரிக்க இந்த நிறுவனம் முயற்சிக்கும்.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

இந்த வகையில் விரைவில் நடைபெறவிருக்கும் 2022 ஜபிஎல் போட்டிகளின் போது மைதானங்களில் நிறுத்துவதற்காகவே புதிய கஸிரங்கா எடிசன்களை டாடா நிறுவனம் அதன் எஸ்யூவி கார்களுக்கு வழங்கியுள்ளது. இதன்படி, டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி கார்களான நெக்ஸான், பஞ்ச், ஹெரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை கஸிரங்கா வெர்சன்களில் கொண்டுவரப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

பொதுவாக, ஸ்பெஷல் எடிசன்கள் என்றாலே சில கூடுதல் வசதிகளுடன் காரின் வெளிப்புற தோற்றத்தில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்படும். அதிகப்பட்சமாக காரின் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் சற்று திருத்தியமைக்கப்படலாம். ஆனால் புதிய டாடா கஸிரங்கா கார்களில் வழக்கமான டார்க் எடிசன் & கோல்டு எடிசன்களை போல் என்ஜின் அமைப்பில் கை வைக்கப்படவில்லை.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

சில கூடுதல் வசதிகளாக, சூடான காற்றை வழங்கக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் பின் கேப்டன் இருக்கைகள் (சஃபாரி கஸிரங்காவில் மட்டும்), வயர் இல்லா சார்ஜிங் வசதி மற்றும் வயர் இல்லா ஆண்ட்ராய்டு & ஆப்பிள் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை டாடா மோட்டார்ஸின் புதிய கஸிரங்கா கார்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் மிக விரைவில் வழக்கமான நெக்ஸான் மற்றும் ஹெரியர் எஸ்யூவி கார்களிலும் கொண்டுவரப்பட உள்ளனவாம்.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்துதல் & வாடிக்கையாளர்கள் குறைத்தீர்ப்பு பிரிவின் தலைவர் ராஜன் அம்பா சமீபத்தில் அளித்த பேட்டியில், "விலை புள்ளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த அளவிற்கு பணத்தை செலுத்த தயாராக இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

இந்த அம்சங்களை (புதிய கஸிரங்கா கார்களில் புதியதாக வழங்கப்பட உள்ளவை) நிலையான வரம்பிற்கு கொண்டு வருவது எப்போதுமே எங்களது நோக்கமாகும். ஆனால் ஒரே அளவிலான விலைகளுக்குள் இருக்க, வேறு சில மாற்றங்களை செய்ய வேண்டும். எனவே வேறு சில வசதிகளை குறைப்பது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமானதாக இருக்குமா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்" என்றார்.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

நெக்ஸான் கஸிரங்கா எடிசனை பொறுத்தவரையில், இது இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் டாப் எக்ஸ்இசட்+(O) இரட்டை-நிற வேரியண்ட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமான நெக்ஸான் எக்ஸ்.இசட்+(O) வேரியண்ட்டை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.54,000 அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரினை பெட்ரோல், டீசல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் பெறலாம்.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

ஏற்கனவே கூறியதுதான், ஸ்டாண்டர்ட் நெக்ஸான் எக்ஸ்.இசட்(O) வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் இதன் கஸிரங்கா எடிசன் காற்றோட்டமான முன் இருக்கைகள், தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடியை பெற்றுவரவுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து கஸிரங்கா எஸ்யூவி கார்களிலும் புதியதாக காற்று சுத்திகரிப்பான் தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்கப்பட உள்ளது.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

இத்தகைய புதிய வசதியினாலேயே அந்த ரூ.54,000 விலை அதிகரிப்பு ஆகும். ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணியின் உடல் வெப்பநிலை அதிகமாகாத அளவிற்கு காற்றை வழங்கக்கூடிய முன் இருக்கைகளை பெறுவதின் மூலமாக இத்தகைய அம்சத்தை இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் கியா சொனெட்டிற்கு அடுத்து பெறும் 2வது காராக டாடா நெக்ஸான் விளங்கவுள்ளது.

டாடா நெக்ஸான் & ஹெரியர் கார்களில் கொண்டுவரப்படும் அசத்தலான புதிய வசதிகள்!! விரைவில் அறிமுகமாகிறதாம்!

ஹெரியர் மாடலை பொறுத்தவரையில், இதன் புதிய கஸிரங்கா எடிசனிலும் காற்றோட்டமான முன் இருக்கைகள், வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி மற்றும் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை விலை அதிகரிப்புடன் ஹெரியரின் வழக்கமான டாப் வேரியண்ட்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 26, 2022, 13:56 [IST]
English summary
Standard Tata Nexon and Harrier likely to get ventilated seats.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+