டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

டாடா ஹெரியர் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக சிறந்த நடுத்தர அளவு எஸ்யூவி கார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதிகளவில் வசதிகள் மற்றும் சிறந்த சவுகரியம் என்பவை தான் டாடா ஹெரியரின் சிறப்பம்சங்கள் ஆகும்.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. டாடாவின் நெட்வொர்க் ஹெரியர் எஸ்யூவி மாடலின் விற்பனைக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதேபோல் ஹெரியருக்கு செகண்ட் கார் மார்க்கெட்டிலும் மிகுந்த ஆதரவு கிடைத்து வருகிறது.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

மேலும், டாடா ஹெரியர் எஸ்யூவி கார்களை விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்வதும் மிக எளிது. இதற்கு உதாரணமாக பல்வேறு மாடிஃபை செய்யப்பட்ட டாடா ஹெரியர் கார்களை பற்றி இதற்குமுன் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஹெரியர் டார்க் எடிசனை மாடிஃபை செய்து அவ்வளவாக நாம் பார்த்தது இல்லை.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

ஆனால் இங்கு ஒரு ஹெரியர் டார்க் எடிசன் காரின் உட்புற கேபின் பிரீமியம் தரத்தில் பழுப்பு நிற லெதர் உள்ளமைவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை கார் தொடர்பாக கார் மேன் இந்தியா என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம். இந்த வீடியோவின் மூலம், இந்த குறிப்பிட்ட ஹெரியர் டார்க் எடிசனில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெரியர் டார்க் எடிசன் காரில் வழக்கமாக வழங்கும் கருப்பு நிற இருக்கை அமைப்பில் பழுப்பு லெதர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கைகள் கருப்பு-பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. மேலும், கதவு பேனல்கள் மற்றும் ஸ்டேரிங் சக்கரத்திலும் இந்த லெதர் ஃபினிஷிங்கை தொடர்ந்துள்ளனர். இத்துடன் ஸ்டேரிங் சக்கரத்தில் இளம் சிவப்பு நிறத்தில் தையலிடப்பட்டுள்ளஜ. இதற்கு ஏற்ப, உட்புற கதவு கைப்பிடிகளில் மரத்துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

இந்த மரத்துண்டு அலங்கரிப்பானது இந்த ஹெரியர் டார்க் எடிசன் காரின் டேஸ்போர்டு மற்றும் ஸ்டேரிங் சக்கரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் காரின் உட்புறத்தின் பிரீமியம் தன்மையை மெருக்கூட்டுகின்றன. இதன் கேபினில் எந்த இடத்திலும் பளிச்சிடும் தன்மை மிகைப்படுத்தப்படவில்லை. இவற்றுடன் இந்த குறிப்பிட்ட ஹெரியர் காரானது அதிக வெளிச்சத்திற்காக எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகளையும் புதியதாக ஏற்றுள்ளது.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

இவற்றை தவிர்த்து இந்த ஹெரியர் டார்க் எடிசன் காரின் வெளிப்புறத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது போல் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் காரின் பொனெட்டிற்குள் வழங்கப்படும் என்ஜின் அமைப்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. டாடா ஹெரியரில் 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டும் என்ஜினின் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகின்றன. தற்போது இந்த டீசல் என்ஜின் தேர்வு மட்டுமே ஹெரியரில் வழங்கப்படுகிறது.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

ஆனால் கூடிய விரைவில் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் பெட்ரோல் என்ஜின் தேர்வை வழங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் இந்த டாடா எஸ்யூவி கார்களில் கொண்டுவரப்பட உள்ள 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

ஹெரியரின் பெட்ரோல் மாடல்கள் அறிமுகமாகினால் அவை நிச்சயம் தற்போதைய டீசல் மாடல்களை காட்டிலும் விலை குறைவானதாகவே இருக்கும். இதன் வாயிலாக டாடா ஹெரியர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை குறைவதால், இதன் விற்பனை அதன்பின் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெரியருக்கு விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700, ஜீப் காம்பஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

டாடா ஹெரியர் காரின் உட்புறத்தை மாடிஃபை செய்தால், இப்படி செய்ய வேண்டும்!! வீடியோ

பெட்ரோல் வெர்சனில் புதியதாக ஹெரியரை அறிமுகப்படுத்துவதை போன்று, அதிகளவில் விற்பனையாகும் மற்றொரு காரான அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஆட்டோமேட்டிக் வெர்சனையும் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. தற்போதைய மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் புதியதாக கொண்டுவரப்பட உள்ள இந்த ஆட்டோமேட்டிக் அல்ட்ராஸ் காரின் அறிமுகம் இன்னும் 3-4 மாதங்களில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Tata harrier dark edition with customized interior details
Story first published: Saturday, January 1, 2022, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X