மாருதி, ஹூண்டாயை ஓரங்கட்ட தீவிரமாக களமிறங்கியிருக்கும் டாடா! 4 புதிய சிறப்பு பதிப்பு கார்கள் சீக்கிரமே வரபோது!
டாடா மோட்டார்ஸ் வரும் பண்டிகை தினங்களில் மக்களைக் கவரும் விதமாகவும், போட்டியாளர்களுக்கு கூடுதல் போட்டியை வழங்கும் விதமாகவும் விரைவில் சிறப்பு பதிப்பு வாகனங்களை களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் இந்திய சந்தையில் ஸ்பெஷல் எடிசன் கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. அந்த வீடியோவில் நான்கு டாடாவின் தயாரிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. மிக தெளிவான முறையில் அல்லாமல் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகையால், சிறப்பு பதிப்பு வாகனங்கள் என்ன மாதிரியான அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது துள்ளியமாக தெரியவில்லை. டாடா மோட்டார்ஸ் தற்போது டிகோர், டியாகோ, பஞ்ச், நெக்ஸான், நெக்ஸான் இவி, நெக்ஸான் இவி மேக்ஸ், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றில் நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களிலேயே சிறப்பு பதிப்புகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்த கார்கள்குறித்த டீசர் வீடியோவையே நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. நிறுவனம் சிறப்பு பதிப்புகளின் உருவத்தை தெளிவாகக் காண்பிக்கவில்லை என்றால் அதன் ஸ்டைல் உள்ளிட்டவை அவற்றை அடையாளப்படுத்த உதவியாக இருக்கின்றன.

வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் இந்த வாகனங்களை விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் விநாயக சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வரிசையாக வரவிருக்கின்றன. இந்த பண்டிகை நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு கூடுதல் டஃப் கொடுக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் தனது பிரபல மாடல்களில் சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சிறப்பு பதிப்புகள் பற்றிய முழு விபரங்களும் தெரிய வரவில்லை என்றாலும் கணிசமான தகவல்கள் இந்த டீசர் வீடியோ வாயிலாக நமது கழுகு பார்வையின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், இந்த சிறப்பு பதிப்புகள் இரட்டை நிற தேர்வில் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, சிறப்பு பதிப்புகள் என்பதை வெளிக்காட்டும் விதமாக பிரத்யேக நிற தேர்வு வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதவிர சிறப்பு அலங்காரப் பொருட்களும் இந்த வாகனங்களில் இடம் பெற இருப்பது தெரிய வந்துள்ளது. இவையே வழக்கமான மாடல்களைக் காட்டிலும் பல மடங்கு மாறுபட்டதாக சிறப்பு பதிப்பு கார்களைக் காட்சியளிக்க செய்ய இருக்கின்றன. தொடர்ந்து, காரின் உட்பக்கத்தில் கணிசமான சிறப்பு பதிப்பிற்கான அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆனால், என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெறும் என்பது அந்தந்த கார்களின் அறிமுகத்தின்போதே அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். நிறுவனம் சிறப்பு பதிப்பாக விற்பனைக்குக் கொண்டு வர தேர்வு செய்திருக்கும் நான்கு கார் மாடல்களும் எஸ்யூவி ரக வாகனங்களும். இந்தியாவில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக நிறுவனத்தின் நெக்ஸான் கார்கள் இருக்கின்றன. இந்த ஒற்றை கார் மாடல் மட்டும் கடந்த ஜூலை மாதத்தில் 14,214 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தைக் காட்டிலும் இந்த விற்பனை எண்ணிக்கை 38 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த சில மாதங்களாகவே டாடா நெக்ஸான் இதுபோன்று அதிக விற்பனை எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஜூன் மாதத்தில்கூட 14,295 யூனிட்டுகள் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனையாகின. இத்தகைய சூப்பரான கார் மாடல் உட்பட மேலும் 3 தயாரிப்புகளையே டாடா விரைவில் சிறப்பு பதிப்பு வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த காரை (நெக்ஸானை) போலவே டாடா சிறப்பு பதிப்பாக உருவாக்கியிருக்கும் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களுக்கும் இந்தியாவில் கணிசமான நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஜூன் மாதத்தில்கூட 14,295 யூனிட்டுகள் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனையாகின. இத்தகைய சூப்பரான கார் மாடல் உட்பட மேலும் 3 தயாரிப்புகளையே டாடா விரைவில் சிறப்பு பதிப்பு வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த காரை (நெக்ஸானை) போலவே டாடா சிறப்பு பதிப்பாக உருவாக்கியிருக்கும் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களுக்கும் இந்தியாவில் கணிசமான நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








