ஒட்டுமொத்த இந்தியாவையும் வளைச்சுபோட ரெடியாகும் டாடா மோட்டார்ஸ்.. சீக்கிரமே தரமான சம்பவத்தை செய்ய போவதாக தகவல்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் சில புதுமுக வாகனங்களை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மின்வாகன சந்தையை ஒரு கை பார்க்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகிவிட்டது என கூறலாம். ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாக டிகோர் இவி, நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்னும் சில எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அது விற்பனைக்குக் களமிறக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் அண்மையில் ஓர் தகவலை நிறுவனம் வெளியிட்டிருந்தது. அடுத்த எலெக்ட்ரிக் தயாரிப்பாக டியாகோவை வெளியீடு செய்ய இருப்பதாக கடந்த வாரம் டாடா அறிவித்திருந்தது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும்.

தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் இது விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், நிறுவனத்தின் டியோகா எலெக்ட்ரிக் கார் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய எலெக்ட்ரிக் கார் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகினர்.

சொல்லப்போனால், இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. இதன் அதிர்வலைகள் ஓய்வதற்கு உள்ளாகவே டாடா மோட்டார்ஸ் மற்றுமொரு சம்பவத்தை நாட்டில் செய்ய தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, நிறுவனம் இன்னும் சில புதுமுக மின்சார வாகன மாடல்களை இந்திய சந்தையில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நிறுவனம் அப்புதுமுக வாகனங்களை வெளியீடு செய்ய இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாட்களிலேயே நிறுவனம் புதுமுக பயணிகள் வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல கார் மாடல்களான ஹாரியர் மற்றும் பஞ்ச் ஆகியவற்றையே விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றை அடுத்த வருடம் 2023 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பின்னரே புதுமுக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆனால், இப்போது வரை இவ்வாகனங்களின் வருகை குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேநேரத்தில், ஹாரியர் எலெக்ட்ரிக் காரை வரும் 2023ம் ஆண்டிலும், பஞ்ச் எலெக்ட்ரிக் வெர்ஷனை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்து விடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் அடுத்தடுத்து 10 மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2025ம் ஆண்டிற்குள்ளாக அனைத்தும் களமிறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது இந்தியாவின் டாப் மின் வாகன உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் இருக்கின்றது. இந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி-க்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக டிகோர் இவி-க்கும் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும். இருப்பினும், இதைவிட நல்ல விற்பனையை நெக்ஸான் இவி-யே நாட்டில் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.
நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக எம்ஜி மோட்டார், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் டாடா மோட்டார்ஸுக்கு என தனி வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை நிரந்தரமாக்கும் வகையிலேயே டாடா மோட்டார்ஸ் அடுத்தடுத்து புதுமுக எலெக்ட்ரிக் கார்களை சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








