எல்லோரும் வாய பிளந்து திரும்பி பார்க்க போறாங்க! டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காரில் வேறலெவல் மாற்றங்கள் வருது!
டாடா நிறுவனம் தனது ஹாரியர் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வரும் 2023ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது. இந்த காரில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் மற்றும் அப்டேட் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் டாடா நிறுவனம் மிக முக்கியமான ஒரு ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் எக்கச்சக்கமான வாகனங்கள் மார்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டை பெற்றுள்ளது. இந்நிறுவனம் தற்போது தனது டாடா ஹாரியர் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை வரும் 2023ம் ஆண்டு மத்தியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

டாடா நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் டாடா பஞ்ச் இவி காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சிக்மா ஃபிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. நெக்ஸான் இவி காருக்கும் குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்பதால் இந்த கார் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த கார் 2023ம் ஆண்டு இறுதியில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாடா நிறுவனம் தனது ஹாரியர் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஹாரியர் கார் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகமாகிக் கடந்த 3 ஆண்டுகளாகச் சிறப்பாக விற்பனையையும் மக்கள் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தயாராகி வருகிறது.
ஃபேர்லிஃப்ட் வெர்ஷனை பொருத்தவரை முகப்பு பக்கத்தில் புதியதாக வடிவமைக்கப்பட்ட கிரில், பின்பக்கம் புதிய டெயில் லைட், புதிய வீல்கள் மற்றும் மற்றும் ஸ்லீக்கான ஹைட்லைட்கள், ஆகியன வெளிப்புறத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளன. உட்புறத்தைப் பொருத்தவரை ஏடிஏஎஸ் உள்ளிட்ட பல தொழிற்நுட்ப மேம்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 டாடா ஹாரியர் காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பத்தின் படி எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இந்த கார் 2023ம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் மார்கெட்டில் ரூ16.5 முதல் ரூ24.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக சஃபாரி காரும் அப்டேட் செய்பயபட வாய்ப்பு இருக்கிறது. சஃபாரி காரிலும் ஏடிஏஎஸ் அப்டேட் மற்றும் வெளிப்புற அப்டேட்டகள் செய்யப்படவுள்ளன. இந்த இரண்டு காரும் புதிய அப்டேட் மூலம் பழைய லுக்கிலிருந்து சில மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் மாறவுள்ளது.
இந்த இரண்டு காரிலும் ஒரே வகையான இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு காரிலும் 2.0 லிட்டர் 4 - சிலிண்டர் டர்போ டீசல்இன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் டாடா சஃபாரி கார் 2023ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்கெட்டிற்கு வரும் போது ரூ18.5 லட்சம் முதல் ரூ26.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications