மாருதிக்கு போட்டியாக 26 கிமீ மைலேஜில் காரை களம் இறக்கப்போகும் டாடா! இனி நடக்கப்போறத பொறுத்திருந்து பாருங்க

டாடா நிறுவனம் தனது டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் காரின் சிஎன்ஜி வேரியன்ட் அறிமுகத்தை தொடர்ந்து தனது டாடா பஞ்ச் காரின் சிஎன்ஜி வேரியன்டை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 26 கி.மீ மைலேஜ் கெண்டதாக இருக்கும்.

இந்தியாவில் அதிகமாக சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி சுஸூகி. இந்நிறுவனத்தின் சிஎன்ஜி கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் மாருதி நிறுவனத்திற்கு போட்டியாக தனது கார்களிலும் சிஎன்ஜி வேரியன்ட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. சிஎன்ஜி மார்கெட்டில் டாடா நிறுவனம் மாருதிக்கு டஃப் போட்டியாளாராக மாறி வருகிறது. சிஎன்ஜி மார்கெட்டில் கணிசமான மார்கெட் ஷேரை வைத்திருக்கிறது.

டாடா நிறுவனம் தனது டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் காரின் சிஎன்ஜி வேரியன்ட் அறிமுகத்தை தொடர்ந்து தனது டாடா பஞ்ச் காரின் சிஎன்ஜி வேரியன்டை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி சுஸூகி. இந்நிறுவனத்தின் சிஎன்ஜி கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் மாருதி நிறுவனத்திற்கு போட்டியாக தனது கார்களிலும் சிஎன்ஜி வேரியன்ட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது டாடா டிகோர் மற்றும் டாடா டியாகோ ஆகிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில் சமீபத்தில் தனது டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் சிஎன்ஜி வேரியன்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் டாடா நிறுவனம் தனது சிஎன்ஜி கார்களின் போர்ட்ஃபோலியாவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் டாடா நிறுவனத்தின் அடுத்த சிஎன்ஜி கார் எது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. டாடா நிறுவனம் அடுத்ததாக தனது டாடா பஞ்ச் காரில் சிஎன்ஜி வேரியன்டை வெளியிடும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் காரே விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இதன் சிஎன்ஜி கார் வந்தால் விற்பனையை யார் நினைத்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு வளர்ச்சியாகி, இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் கார் என்ற இலக்கை பிடித்தாலும் பிடிக்கும். தற்போது இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி இருக்கிறது. இந்த கார் அதை மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலம். டாடா பஞ்ச் காரின் பெட்ரோல் வேரியன்ட் காரை பொருத்தவரை அதன் விலை ரூ6.75 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ8.37 லட்சம் வரையில் விற்பனையாகிறது. இதில் சிஎன்ஜி வேரியன்ட் வந்தால் முன்பு டாடா டியாகோ, டிகோர் கார்களில் சிஎன்ஜி வேரியன்ட்களின் விலை சரியாக ரூ90 ஆயிரம் அதிகமாக இருந்தது. அப்படி என்றால் இந்த காரின் விலை ரூ7.65 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ9.27 லட்சம் என் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜினை பொருத்தவரை டாடா பஞ்ச் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் டாடா டியாகோ மற்றும் டிகோர் காரில் உள்ளது. இது 73 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.49 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் என தாராளமாக எதிர்பார்க்கலாம். டாடா நிறுவனம் தனது டாடா பஞ்ச் சிஎன்ஜி காரை இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு முதல் பகுதியிலேயே வெளியிட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் டாடா பஞ்ச் மற்றும் டாடா சிஎன்ஜி ஆகிய கார்களை காட்சிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இப்படியாக காட்சி படுத்தினால் இது மினி எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையில் பெரும் புரட்சியே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனத்தில் பஞ்ச் கார் தற்போது அதிகமாக விற்பனையாகி வருகிறது மாதம் குறைந்தது 10 ஆயிரம் கார்கள் விற்பனையாகிறது. இந்த கார் அறிமுகமான போதே இந்த காருக்கான ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். மார்கெட்டில் இந்த கார் புரட்சியே செய்துள்ளது. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் வந்தால் அதை வாங்க நீங்க ரெடியா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

இந்நிறுவனம் ஏற்கனவே தனது டாடா டிகோர் மற்றும் டாடா டியாகோ ஆகிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில் சமீபத்தில் தனது டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் சிஎன்ஜி வேரியன்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் டாடா நிறுவனம் தனது சிஎன்ஜி கார்களின் போர்ட்ஃபோலியாவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் டாடா நிறுவனத்தின் அடுத்த சிஎன்ஜி கார் எது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டாடா நிறுவனம் அடுத்ததாக தனது டாடா பஞ்ச் காரில் சிஎன்ஜி வேரியன்டை வெளியிடும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் காரே விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இதன் சிஎன்ஜி கார் வந்தால் விற்பனையை யார் நினைத்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு வளர்ச்சியாகி, இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் கார் என்ற இலக்கை பிடித்தாலும் பிடிக்கும். தற்போது இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி இருக்கிறது. இந்த கார் அதை மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலம்.

டாடா பஞ்ச் காரின் பெட்ரோல் வேரியன்ட் காரை பொருத்தவரை அதன் விலை ரூ6.75 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ8.37 லட்சம் வரையில் விற்பனையாகிறது. இதில் சிஎன்ஜி வேரியன்ட் வந்தால் முன்பு டாடா டியாகோ, டிகோர் கார்களில் சிஎன்ஜி வேரியன்ட்களின் விலை சரியாக ரூ90 ஆயிரம் அதிகமாக இருந்தது. அப்படி என்றால் இந்த காரின் விலை ரூ7.65 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ9.27 லட்சம் என் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜினை பொருத்தவரை டாடா பஞ்ச் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் டாடா டியாகோ மற்றும் டிகோர் காரில் உள்ளது. இது 73 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.49 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் என தாராளமாக எதிர்பார்க்கலாம்.

டாடா நிறுவனம் தனது டாடா பஞ்ச் சிஎன்ஜி காரை இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு முதல் பகுதியிலேயே வெளியிட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் டாடா பஞ்ச் மற்றும் டாடா சிஎன்ஜி ஆகிய கார்களை காட்சிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இப்படியாக காட்சி படுத்தினால் இது மினி எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையில் பெரும் புரட்சியே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தில் பஞ்ச் கார் தற்போது அதிகமாக விற்பனையாகி வருகிறது மாதம் குறைந்தது 10 ஆயிரம் கார்கள் விற்பனையாகிறது. இந்த கார் அறிமுகமான போதே இந்த காருக்கான ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். மார்கெட்டில் இந்த கார் புரட்சியே செய்துள்ளது. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் வந்தால் அதை வாங்க நீங்க ரெடியா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Tata may launch punch cng with 26kmpl mileage
Story first published: Friday, November 25, 2022, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X