டியாகோக்கு அடுத்து டிகோர்... செம அப்டேட்டை விட்ட டாடா... இதை யாருமே எதிர்பார்க்கல...

டாடா நிறுவனம் டியாகோ இவி காரின் அறிமுகத்திற்குப் பிறகு டிகோர் இவி காருக்கான அப்டேட்டை அறிவிக்கவுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

டாடா நிறுவனம் இந்தியாவில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்தின் வாகன தயாரிப்பில் பில்டு குவாலிட்டியால் மக்கள் பலர் இந்நிறுவனத்தின் கார்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக டாடா நெக்ஸான் மற்றும் டாடா பஞ்ச் ஆகிய கார்களுக்கு மார்கெட்டில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் எலெக்டரிக் வாகன விற்பனையிலும் தனக்கென ஒரு தடத்தைப் பதித்து வருகிறது.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

இந்நிறுவனம் கடந்த வாரம் தான் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த கார் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அதே டியாகோ காரின் வடிவின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த கார்தான் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராகும். இந்நிறுவனத்திற்கு இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல ஏற்கனவே டிகோர் இவி, நெக்ஸான் இவி என பல கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றியுள்ளது.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

டாடா கார் சமீபத்தில் அறிமுகப்படுத்திய டியாகோ இவி காரில் மல்டி மோட் ரீஜென், க்ரூஸ் கண்ட்ரோல், உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த அம்சங்கள் எல்லாம் டாடாவின் முந்தைய எலெக்ட்ரிக் காரான டிகோர் காரில் கிடையாது. குறைந்த விலை காரிலேயே இந்த அம்சங்கள் எல்லாம் இருக்கிறது இந்த அம்சங்கள் எங்கள் காரில் இல்லையே என இதற்கு முன்னர் டிகோர் காரை வாங்கியவர்கள் எல்லாம் ஆதங்கப்பட்டு வந்தனர்.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

இந்நிலையில் அவர்களுக்கு எல்லாம் தீபாவளி பரிசு வழங்கும் விதமாக டாடா நிறுவனம் ஒரு முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் டிகோர் காரையும் இந்த ஆப்ஷனுடன் அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி இனி அந்த கார்கள் எல்லாம் தயாரிக்கும் போதே மல்டி மோட் ரீஜென், க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன்களுடன் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

இது மட்டுமல்ல முக்கியமாக விஷயம் என்னவென்றால் இந்த அப்டேட் ஏற்கனவே டிகோர் இவி கார்களை வாங்கியவர்களுக்கும் கிடைக்கவுள்ளது. இந்த புதிய ஆப்ஷன் அப்டேட்கள் எல்லாம் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகிய 2 அப்டேட்களை உள்ளடக்கியது. டாடா நிறுவனம் ஏற்கனவே டிகோர்இவி கார்களை வாங்கியவர்களுக்கு இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை இலவசமாக வழங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்கான ஹார்டுவேர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

இப்படியாக அப்டேட் செய்வதால் ஏற்கனவே உள்ள கார்களுக்கும் மல்டி ரீஜென் மோட் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய ஆப்ஷன்கள் கிடைத்துவிடும். டாடா நிறுவனத்திற்கு இப்படியாக சாஃப்ட்வேர் அப்டேட் செய்வதது டாடா நிறுவனத்திற்கு ஒன்றும் புதிதல்ல டாடா நிறுவனம் நெக்ஸான் இவி மேக்ஸ் காரை வெளியிட்ட போது நெக்ஸான் பிரைம் காருக்கு இப்படிதான் சாஃப்ட்வேர் அப்டேட்டை வெளியிட்டனர்.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

ஏற்கனவே டிகோர் இவியை வாங்கியவர்கள் டாடா சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு சென்றால் இலவசமாக சாஃப்ட்வேர் அப்கிரோடு செய்து கொடுக்கப்படும். ஹார்டுவேரை தனியாகக் காசு கொடுத்து வாங்கி பொருத்திக்கொள்ளலாம். இது மட்டுமல்ல வாடிக்கையாளர்கள் தங்கள் காரின் உட்புற கட்டமைப்பை லெதர் அப்ஹோல்சரியாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

ஸ்டியரிங் வீலையும் லெதர் கவர் கொண்டு மாற்ற முடியும், இது போக ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆகிய வசதியையும் டிகோர்இவி காரில் கொண்டு வர முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டியாகோக்கு அடுத்து டிகோர் . . . செம அப்டேட்டை விட்ட டாடா . . . இதை யாருமே எதிர்பார்க்கல . . .

இந்த அப்டேட்டிங் காரின் அம்சங்கள் மட்டுமே மாறுபடுகிறது. காரின் மெக்கானிக்கல் அப்டேட்டில் மாற்றம் இல்லை. இந்த காரில் 26 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ARAI சான்றின் படி முழு சார்ஜில் 306 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 75 எச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

Most Read Articles

English summary
Tata may launch updated tigor ev this month
Story first published: Tuesday, October 4, 2022, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X