டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடந்த 2021ம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு 1,70,151 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் 2021ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3,31,182 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது 94.6 சதவீத வளர்ச்சியாகும்.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அதிகம் விற்பனையான டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் பட்டியலில் நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு வெறும் 48,842 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டில் 1,08,577 ஆக உயர்ந்துள்ளது. இது 122 சதவீத வளர்ச்சியாகும். ஒரு காலண்டர் ஆண்டில் டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இது மிகப்பெரிய சாதனை என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் 49,486 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு 69,744 ஆக உயர்ந்துள்ளது. இது 41 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா டியாகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் 47,070 ஆக இருந்த டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டில் 64,944 ஆக உயர்ந்துள்ளது. இது 38 சதவீத வளர்ச்சியாகும்.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

இந்த பட்டியலில் டாடா ஹாரியர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021ம் ஆண்டில் 28,038 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டில் வெறும் 14,071 ஆக மட்டுமே இருந்தது. இது 99 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா பன்ச் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021ம் ஆண்டு 22,571 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை 2020ம் ஆண்டுடன் ஒப்பிட முடியாது. டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

ஆனால் மிக குறுகிய காலத்திலேயே அதிக எண்ணிக்கையில் டாடா பன்ச் கார் விற்பனையாகியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் டாடா டிகோர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10,213 டிகோர் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 18,900 ஆக உயர்ந்துள்ளது.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

இந்த பட்டியலில் டாடா சஃபாரி ஏழாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 18,358 சஃபாரி கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் புதிய சஃபாரி காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் 2020ம் ஆண்டுடன் ஒப்பிட முடியாது.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு பாதுகாப்புதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய 3 கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 3 கார்களை விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் பெறுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டுள்ளது. எனவே புதிய கார் வாங்க பலரும் திட்டமிட்டிருக்கலாம்.

டாடா கார் சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... அமோக வரவேற்பை வாரி வழங்கும் இந்தியர்கள்... காரணம் இல்லாமா இருக்குமா?

இதில் நீங்களும் ஒருவர் என்றாலோ, பாதுகாப்பான கார்களை வாங்க விரும்பினாலோ நீங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களை பரிசீலிக்கலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 19ம் தேதி டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இதுவும் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
Tata model wise 2021 sales report nexon grabs 1st position
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X