நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டை மிகவும் சிறப்பாக நிறைவு செய்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு 3,31,182 கார்களை விற்பனை செய்து அசத்தியிருந்தது. அதற்கு முந்தைய 2020ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 1,70,151 ஆக மட்டுமே இருந்தது. இது 94.6 சதவீத வளர்ச்சியாகும்.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த வரிசையில் நடப்பு 2022ம் ஆண்டையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 40,777 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும்.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதாவது ஒரு மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான். இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார்களை விற்பனை செய்தது கிடையாது. இதுதவிர இன்னும் பல்வேறு சாதனைகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் படைத்துள்ளது.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன்படி நெக்ஸான் மற்றும் பன்ச் ஆகிய கார்களுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பால், கடந்த ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 28,108 எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்களின் விற்பனை என எடுத்து கொண்டால் இது ஒரு அதிகபட்சமாகும். இந்த சாதனையில் நெக்ஸான் மற்றும் பன்ச் ஆகிய கார்களின் பங்களிப்பு மகத்தானது.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கடந்த ஜனவரி மாதம் நெக்ஸான் மற்றும் பன்ச் ஆகிய 2 கார்களுமே 10 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகபட்ச எலெக்ட்ரிக் வாகன விற்பனை எண்ணிக்கையையும் பதிவு செய்து அசத்தியுள்ளது.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 2,892 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. தற்போதைய நிலையில் நெக்ஸான் மற்றும் டிகோர் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதுதவிர 3 ஆயிரத்திற்கும் அதிகமான சிஎன்ஜி கார்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகிய 2 சிஎன்ஜி கார்களை கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே மாதத்தில் ஏராளமான சாதனைகளை படைத்து விட்டது.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இத்தனைக்கும் கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி பிரச்னைக்கு மத்தியிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இவ்வளவு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போது செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை வேறு பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன் காரணமாக கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நேரத்தில் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியவில்லை. இதன் விளைவாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மற்றும் கார்கள் விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்து கொண்டுள்ளன.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இப்படிப்பட்ட ஒரு நெருக்கடிக்கு மத்தியிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் விற்பனையில் இமாலய சாதனைகளை படைத்து வருவது ஆச்சரியமான விஷயம்தான். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டியாகோ, டிகோர், பன்ச், நெக்ஸான், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.

நம்பவே முடியல... ஒரே மாதத்தில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்த டாடா... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதில், டிகோர் காரின் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனும் கிடைக்கிறது. அதே நேரத்தில் டியாகோ காரின் சிஎன்ஜி வெர்ஷனும், நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Article Published On: Tuesday, February 1, 2022, 16:15 [IST]
English summary
Tata motors creates history in january 2022 check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+