டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

உற்பத்தி செலவு அதிகரிப்பின் காரணமாக, கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழலுக்கு ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் தள்ளப்படுகின்றன. இத்தகைய விலை அதிகரிப்புகளினால் கார்களின் விற்பனை சில மாதங்களுக்கு குறைய துவங்குகிறது. இதில் இருந்து மீளும் கார்கள் சில மாதங்களுக்கு மீண்டும் விற்பனையில் சூடுப்பிடிக்க ஆரம்பிக்கும்.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

ஆனால் சில கார்கள் இத்தகைய விலை அதிகரிப்புகளினாலேயே முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட சம்பவங்களும் நமது இந்திய சந்தையில் அரங்கேறி உள்ளன. அதேநேரம் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க சில கார்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உஷாராக சலுகைகளையும், தள்ளுப்படிகளையும் அறிவித்துவிடுகின்றன.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் தான் புதிய வருடத்தை முன்னிட்டு பல கார் மாடல்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டன. இதனை சரிச்செய்ய தங்களது விற்பனை கார்களுக்கு பல பிராண்ட்களில் இருந்து நடப்பு பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ரெனால்ட் அதன் கார்கள் அனைத்திற்கும் சலுகைகளை அறிவித்திருந்தது.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

இந்த வகையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில கார்களுக்கு சலுகைகளை 2022 பிப்ரவரி மாதத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்தியாவின் மலிவான & பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்களுள் முதன்மையானதாக விளங்கும் டியாகோ மற்றும் டிகோர் செடான் கார்கள் ரூ.10,000 பணம் தள்ளுபடியை பெற்றுள்ளன.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

இத்துடன் ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸும் இந்த டாடா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி இதன் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு சலுகைகள் இல்லை. அதேபோல் டியாகோ என்ஆர்ஜி காருக்கு எந்தவொரு சலுகையும் அறிவிக்கப்படவில்லை. டாடா நெக்ஸான் எரிபொருள் கார் ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேன்ஞ் போனஸை மட்டுமே ஏற்றுள்ளது.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!
Tata Motors Discounts
Model Cash Discount Exchange Bonus
Tata Tiago (except CNG variants) Rs. 10,000 Rs. 15,000
Tata Tiago NRG 0 0
Tata Tigor (except CNG variants) Rs. 10,000 Rs. 15,000
Tata Tigor EV 0 0
Tata Punch 0 0
Tata Altroz 0 0
Tata Nexon 0 Rs. 15,000 (diesel only)
Tata Nexon EV 0 0
Tata Harrier Rs. 20,000 (MY2021 cars only) Rs. 40,000 (standard variants)/Rs. 25,000 (Dark Edition)
Tata Safari Rs. 20,000 (MY2021 cars only) Rs. 40,000 (standard variants)/Rs. 25,000 (Dark Edition)

டாடா மோட்டார்ஸின் மற்ற எஸ்யூவி கார்கள் என்று பார்த்தால், ஹெரியர் மற்றும் சஃபாரி மாடல்களின் மை2021 கார்களுக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஹெரியர் (அ) சஃபாரி காரினை வாங்குவோர் ரூ.10,000 வரையிலான பணம் தள்ளுபடியினை பெறலாம். அதேநேரம் இந்த கார்களின் அனைத்து ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களுக்கும் ரூ.40,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

மேலும் இவற்றின் டார்க் எடிசன்களை வாங்குவோர் ரூ.25,000 வரையில் எக்ஸ்சேன்ஞ் போனஸில் பெற முடியும். இத்துடன் சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான கார்ப்பிரேட் போனஸையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார்ப்பிரேட் போனஸ் ஆனது வாகனத்தை பொறுத்து ரூ.5,000-இல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளது.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

இவை தவிர்த்து டாடா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் போன்ற எரிபொருள் என்ஜின் கார்களுக்கும், நெக்ஸான் இவி & டிகோர் இவி போன்ற எலக்ட்ரிக் கார்களுக்கும் எந்தவொரு சலுகையும் இந்த 2022 பிப்ரவரி மாதத்திற்காக அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றன.

டாடா கார்களை வாங்க இதுவே சரியான நேரம்!! பணம் தள்ளுபடி & எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிப்பு!

கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 2,892 எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் சந்தையில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பீடுகையில் இது சுமார் 462.65% அதிகமாகும். ஏனெனில் இதற்கு முந்தைய ஜனவரியில் வெறும் 514 எலக்ட்ரிக் கார்களையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இப்போதைக்கு டிகோர் இவி & நெக்ஸான் இவி என இரு எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே டாடா பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, February 7, 2022, 15:22 [IST]
English summary
Tata Motors February 2022 Discounts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+