இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

டாடா மோட்டார்ஸ் அதன் புதிய கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியருக்கின்றது. எவ்வளவு ரூபாய் வரை வாகனங்களின் விலையில் டாடா உயர்வைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விரைவில் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் அதன் பயணிகள் பிரிவில் விற்கப்பட்டு வரும் புதிய கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

0.55 சதவீதம் வரை கார்களின் விலையை நிறுவனம் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு இன்று (ஜூலை 9) முதலே அமலுக்கு வந்துள்ளது. ஆகையால், நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இன்று முதல் புதிய விலை உயர்வுடனேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

நிறுவனத்தின் திடீர் விலை உயர்வு நடவடிக்கைக்கு சமீப காலமாக தொடர்ச்சியாக உயர்ந்து வரும் வாகன கட்டுமான பொருட்களின் விலையுயர்வேக் காரணமாக உள்ளது. முன்னதாக ஏற்கனவே இதே காரணத்தைக் காட்டி நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை 1.1 சதவீதம் வரை உயர்த்தியிருந்தது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

இந்த விலை உயர்வு நடவடிக்கை கடந்த 2022 ஏப்ரல் 23ம் தேதி அன்றே எடுக்கப்பட்டது. இந்தநிலையில், மீண்டும் தற்போது இம்மாதத்தில் விலைகளை உயர்த்தி டாடா மோட்டார்ஸ் அதிரடி காட்டியுள்ளது. நிறுவனத்தின் இந்த செயல் டாடா கார் பிரியர்களை பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கின்றது. ஏற்கனவே, ஏப்ரல் மாத விலையுயர்வு அதிர்ச்சியில் இருந்தே மக்கள் வெளி வராத நிலையில் மீண்டும் உயர்வை செய்து டாடா மேலும் ஷாக்கை இந்தியர்களுக்கு வழங்கியிருக்கின்றது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

இந்த புதிய விலை உயர்வினால் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர இருக்கின்றது. ஏற்கனவே வாகனங்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கும் இந்த விலையுயர்வு பொருந்தும் என நிறுவனம் அறிவித்துள்ளது. டாடாவின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

இதன் விளைவாக 2022 மே மாத்தில் அதிகம் கார்களை விற்பனைச் செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், நடந்து முடிந்த ஜூன் மாதத்தில் இந்த இடத்தை மீண்டும் ஹூண்டாய் மோட்டார்ஸுடம் இழந்தது. ஆம், அதிக யூனிட் ஹூண்டாய் கார்கள் விற்பனையாகியதனால் இரண்டாம் இடத்தை ஹூண்டாய் பிடித்தது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

டாடா மோட்டார்ஸ் கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு சந்தையில் மட்டும் 45,197 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. 2021ம் ஆண்டின் ஜூன் மாதத்தைக் காட்டிலும் இது 87 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கையாகும். இதேபோல் 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிலும் நல்ல விற்பனை வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கின்றது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

1,30,125 யூனிட்டை டாடா வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது 102 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கையாகும். இத்தகைய சூப்பரான விற்பனை வளர்ச்சியை டாடாவின் தயாரிப்புகள் பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்திலேயே நிறுவனம் அதன் கார்களின் விலையை உயர்த்தியிருக்கின்றது. இது, நிறுவனத்தின் விற்பனையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் யூகிக்கப்படுகின்றது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக நெக்ஸான், பன்ச், ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் உள்ளன. 23 நிதியாண்டின் முதல் காலாண்டின் ஒட்டுமொத்த விற்பனையில் இவை 68 சதவீதம் இடத்தைப் பிடித்துள்ளன. குறிப்பாக, பெரும் இடத்தை நெக்ஸான் எஸ்யூவி பிடித்துள்ளது.

கார்களின் விலையை உயர்த்தியது டாடா... இவ்ளோ ரூபா ஏத்துவாங்கனு நினைச்சுகூட பாக்கல! போறபோக்க பாத்தா புது காரே வாங்க முடியாது போல!

இதேபோல் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. நெக்ஸான் இவி எனும் பெயரில் கிடைத்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் காரே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராகும். இதற்கு அடுத்தபடியாக சற்று விலை குறைவான தேர்வாக நிறுவனம் டிகோர் இவி எலெக்ட்ரிக் காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Saturday, July 9, 2022, 17:06 [IST]
English summary
Tata motors hike s price entire passenger vehicle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+