டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல.. சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் புகழ்பெற்ற மின்சார கார் மாடல்களில் ஒன்றான நெக்ஸான் இவி-யின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் மின் வாகன உலகில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாக சில எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அவற்றில் ஒன்றே நெக்ஸான் இவி (Nexon EV). எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மின்சார கார் மாடலாக இது வலம் வந்துக் கொண்டிருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இத்தகைய ஓர் கார் மாடலின் விலையையே டாடா மோட்டார்ஸ் தற்போது உயர்த்தியிருக்கின்றது. நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அவை அனைத்தின் விலைகளுமே தற்போது ஏற்றம் செய்யப்பட்டுள்ளன. ரூ. 25 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

நெக்ஸான் இவி எக்ஸ்எம் (Nexon EV XM), நெக்ஸான் இவி எக்ஸ்இசட்-ப்ளஸ் (Nexon EV XZ+), நெக்ஸான் இவி எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் (Nexon EV XZ+ Lux), நெக்ஸான் இவி எக்ஸ்இசட்-ப்ளஸ் டார்க் எடிசன் (Nexon EV XZ+ Dark edition), நெக்ஸான் இவி எக்ஸ்இசட்-ப்ளஸ் டார்க் எடிசன் (Nexon EV XZ+ Lux Dark edition) இவையே அந்த ஐந்து விதமான வேரியண்டுகள் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

அதிரடி விலை உயர்வின் காரணத்தினால் நெக்ஸான் மின்சார கார் பிரியர்கள் சற்றே அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். விலை உயர்வால் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையும் மாற்றத்துடன் காணப்படுகின்றது. அதன் விலை ரூ. 14.54 லட்சமாக மாறியிருக்கின்றது. டாப் வேரியண்டின் விலையோ ரூ. 17.15 லட்சமாக உயர்ந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இந்த திடீர் விலையுயர்விற்கு ரஷ்யா-உக்ரைன் போரே காரணமாகக் கூறப்படுகின்றது. இரு நாட்டின் போரால் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. அந்தவகையில், கார் தயாரிப்பில் முக்கிய பங்கினை வகிக்கும் ஸ்டீல், பல்லடியம், அலுமினியம் உள்ளிட்டவற்றின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இதன் விளைவாகவே தற்போது கார்களின் விலையும் உயர ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் இவி இந்தியாவின் மிக சிறந்த விற்பனையைப் பெறும் எலெக்ட்ரிக் காராகும். சென்ற பிப்ரவரி மாதம் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் இக்கார் விற்பனையாகின.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இத்தகைய மிக சிறந்த விற்பனை எண்ணிக்கையை நெக்ஸான் இவி பெற்றதனால் மின்சார கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உருவெடுத்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில், கிட்டத்தட்ட 87 சதவீத சந்தை பங்கை டாடா மோட்டார்ஸ் கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் 30.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சிங்க்ரோனஸ் மேக்னட் இன்டக்சன் மின் மோட்டார் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 129 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

டிரைவ் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு விதமான டிரைவிங் மோட்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஸ்மார்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அஸ்செண்ட் அசிஸ்ட், ஹில் டெசன்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸ் இப்படி செய்யும்னு துளியளவும் எதிர்பார்க்கல... சோகத்தில் ஆழ்த்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இந்த எலெக்ட்ரிக் காரை வழக்கமான 15 A திறன் கொண்ட பிளக் பாயிண்டில் வைத்துகூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால், இதில் வைத்து சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 8.5 மணி நேரங்களை முழுமையாக சார்ஜாக எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களில் வைத்தால் சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜாக வெறும் 60 நிமிடங்களே போதுமானது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 19:01 [IST]
English summary
Tata motors increases nexon ev price here is new price list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+