இப்பவே வெடி வெடிக்க ஆரம்பிச்சுருச்சு நம்ம டாடா.. பெரிய திரை, பனோரமிக் சன்ரூஃப் உடன் ஹாரியரில் புதிய தேர்வு!
பெரிய திரை, பனோரமிக் சன்ரூஃப் என எக்கசக்க அம்சங்களுடன் ஹாரியர் (Tata Harrier) கார் மாடலில் இரு புதிய தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக உறுதியான கட்டமைப்பிற்கு பெயர்போன டாடா காராக ஹாரியர் (Tata Harriers) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்தகார் மாடலிலேயே டாடா மோட்டார்ஸ் தற்போது இரு புதிய தேர்வுகளை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் தற்போது இக்காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் இவ்விருக்கு தேர்வுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

எக்ஸ்எம்எஸ் மற்றும் எக்ஸ்எம்ஏஎஸ் ஆகிய இரு புதிய தேர்வுகளே தற்போது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இவை இரண்டும் அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட வேரியண்டுகளாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதன் இதன் ஆரம்ப நிலை தேர்வான எக்ஸ்இ-இல் காணப்படாத அம்சங்கள் பல இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இரு புதிய தேர்வுகளில் வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், எக்ஸ்எம்எஸ் தேர்வில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களின் பட்டியல் இதோ:
அலங்கார அம்சங்கள்:
- டர்ன் இன்டிகேட்டருடன் கூடிய டூயல் ஃபங்க்சன் டிஆர்எல்-கள்
- பனோரமிக் சன்ரூஃப்
- டூயல் ஏர் பேக் (டிரைவர் மற்றும் கோ-டிரைவர் பயணிக்கானவை)
- ஹில் ஹோல்டு கன்ட்ரோல்
- டிராக்சன் கன்ட்ரோல்
- ரோல் ஓவர் மிடிகேசன்
- கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்,
- பிரேக் டிஸ்க் வைப்பிங்
- இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்
- இன்ஃபோடெயின்மென்டில் தகவலை வழங்கும் வசதிக் கொண்ட ரியர் பார்க்கிங் சென்சார்
- பெரிமெட்ரிக் அலாரம் சிஸ்டம்
- முன் பக்க பனி மின் விளக்கு
- ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா
- ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு
- ப்ளோட்டிங் ரக 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- பனமுக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல்
- 8 ஸ்பீக்கர்கள் அடங்கிய மியூசிக் சிஸ்டம்
- பவர் ஸ்டியரிங் வீல்,
- டில்ட் மற்றும் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல்
- ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ்
- பவர் விண்டோக்கள்
- 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை
- எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் அவுட்டர் மிரர்ரர்கள்
- ரியர் வைப்பர்
- ரிமோட் சென்ட்ரல் லாக்கிங்
- மழை பெய்தால் தானாக வைப் செய்யும் கருவி
- ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப்
- எலெக்ட்ரிக்கல்லி ஃபோல்டபிள் அவுட்ர் மிரர்ரர்கள்

பாதுகாப்பு அம்சங்கள்:

தொழில்நுட்ப அம்சங்கள்:

கம்ஃபோர்ட் மற்றும் கன்வீனியன்ஸ் அம்சங்கள்:

என எக்கசக்க அம்சங்களுடன் புதுமுக தேர்வுகளில் வழங்கப்பட்டுள்ளன. மேலே பார்த்த அம்சங்கள் எக்ஸ்எம்ஸ் மற்றும் எக்ஸ்எம்ஏஎஸ் என இரண்டிலும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே ஆகும். எக்ஸ்எம்எஸ் தேர்வை மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வாங்க முடியும்.

இதேபோல், எக்ஸ்எம்ஏஎஸ் தேர்வில் தானியங்கி தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இது இரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் ஆகும். இந்த வித்தியாசத்தினால் இவற்றின் விலையும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. தானியங்கி கியர்பாக்ஸ், டீசல் மோட்டார் தேர்வுடன் விற்பனைக்கு வந்திருக்கும் எக்ஸ்எம்ஏஎஸ் வேரியண்டிற்கு ரூ. 18.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் டீசல் மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைக்கும் எக்ஸ்எம்எஸ் -க்கு ரூ. 16.09 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா நிறுவனம் இந்த கார் மாடலை ஜெட், காசிரங்கா மற்றும் டார்க் எனும் சிறப்பு பதிப்புகளிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில், டாடா ஹாரியர் ரூ. 14.70 லட்சம் தொடங்கி ரூ. 22.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவும், எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் தற்போதையே நிலவரப்படி அனைத்து சிறப்பு பதிப்புகளுடன் சேர்த்து 20க்கும் அதிகமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றிலேயே புதியதாக இரு புதிய தேர்வுகள் இன்று (செப்டம்பர் 16) சேர்க்கப்பட்டுள்ளன. இவை வரும் ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








