கவர்ச்சிகரமான அல்ட்ராஸ் கார் மாடலில் இரு புதிய தேர்வுகள் அறிமுகம்! இதோட விலை ரொம்ப அதிகம் எல்லாம் கிடையாதுங்க!
டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார் மாடலில் இரு புதிய தேர்வுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவைகுறித்து கூடுதல் முக்கிய விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்று அல்ட்ராஸ் (Altroz). இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலாகும். இந்தக் கார் மாடலிலேயே இரு புதிய வேரியண்டுகளை நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அல்ட்ராஸ் டார்க் எக்ஸ்டி (XT) மற்றும் அல்ட்ராஸ் டார்க் எக்ஸ்இசட்-ப்ளஸ் (XZ+) ஆகிய தேர்வுகளையே நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்திருக்கின்றது. எக்ஸ்இசட்-ப்ளஸ் டார்க் எடிசன் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இதன் அப்கிரேட் வெர்ஷன் ஆகும்.

முன்னதாக 1.2 நேச்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினிலேயே இது விற்பனைக்குக் கிடைத்து வந்தது. புதியதாக 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையே நிறுவனம் தற்போது அப்கிரேடாக எக்ஸ்இசட்-ப்ளஸ் டார்க் எடிசனில் வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி இரு புதிய தேர்வுகளும் கூடுதல் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய வாகனங்களாக காட்சியளிக்கின்றன.

ஏற்கனவே அதிக பிரீமியம் தர அம்சங்கள் கொண்ட வாகனமாக அல்ட்ராஸ் காட்சியளிக்கின்றது. இதனை இன்னும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகள் கொண்ட காராக மாற்றும் வகையிலேயே 'டார்க் எடிசன்' சிறப்பு பதிப்புகள் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

அவை பிரத்யேகமான நிறம், அலங்காரங்களைக் கொண்டிருக்கும். இவையே வழக்கமான அல்ட்ராஸ் மற்றும் டார்க் எடிசன் அல்ட்ராஸுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் ஆகும். இதுமாதிரியான அம்சங்கள் கொண்ட டார்க் எடிசன் தேர்வின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் வகையிலேயே புதிதாக எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் ஆகியவற்றை டாடா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

அல்ட்ராஸ் கார் மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையிலேயே இரு புதிய தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. டாடா நிறுவனம் முதல் முறையாக அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கை 2020 ஜனவரி மாதத்திலேயே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னரே 2021 ஜூலை மாதத்தில் டார்க் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டார்க் எடிசன் சிறப்பு பதிப்பு கார்களில் புதிய அம்சங்களாக ஹைபர் ரக வீல்கள், முன் பக்க ஃபெண்டரில் டார்க் பேட்ஜ், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கைகள், லெதர் விராப்பட் ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் க்நாப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், டையர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பிரேக் ஸ்வே கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். இதுதவிர இன்னும் பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இதன் விலை சற்று அதிகமாக காட்சியளிக்கின்றது. ரூ. 7.96 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

டாடா அல்ட்ராஸ் ஓர் அதிக பாதுகாப்பான கார் மாடலாகும். இந்தியாவில் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் அந்தஸ்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த வரவேற்பை அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே டார்க் எடிசன் மற்றும் அதனை விரிவாக்கம் செய்யும் பணியில் டாடா களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








