வீட்டு வாசலுக்கே வந்து காரை விற்க டாடா முடிவு... எப்படினு கேக்குறீங்களா? இதோ முழு விபரம்!
டாடா (Tata Motors) நிறுவனம் புதிய 'அனுபவ்' (Anubhav) திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), 'அனுபவ்' (Anubhav) எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வீட்டு வாசலுக்கே வந்து காரை விற்பனைச் செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பிரத்யேகமாக கிராமப் புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த சேவையை டாடா தொடங்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையகங்கள் நகர்புறங்களில் மிக அதிகளவில் உள்ளன. இதேபோல் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகர்புறங்களில்கூட நிறுவனத்தின் விற்பனையகங்கள் கணிசமான அளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களை கவர் செய்யும் வகையில் நிறுவனத்தின் விற்பனையகங்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றது.

இந்த நிலையைக் களையும் பொருட்டே நிறுவனம் அனுபவ் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த திட்டத்தை 'ஷோ-ரூம் ஆன்-வீல்' என்றும் கூட கூறலாம். ஆம், கார் விற்பனையாளர்கள் ஷோரூமை பிரதிபலிக்கக் கூடிய ஓர் வாகனத்தில் வந்தே புது வாகன விற்பனையில் ஈடுபட இருக்கின்றனர்.

இதற்காக நிறுவனம் ஒட்டுமொத்தமாக 103 மொபைல் ஷோரூம்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். இவை ஏற்கனவே செயல்பட்டு வரும் கார் விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். மொபைல் ஷோரூம்கள் கார் விற்பனை மட்டுமின்றி டாடா நிறுவனத்தின் கார்களுக்கான அக்ஸசெரீஸ் விற்பனை, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய உதவுதல், கடன் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கின்றது.

இதுதவிர, டாடாவின் அனைத்து வாகன தயாரிப்புகள் பற்றிய தகவலையும் இங்கு நம்மால் அறிந்துக் கொள்ள முடியும். மேலும், டெஸ்ட் டிரைவிற்கான புக்கிங் மற்றும் டாடா கார்களில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகையால், டாடாவின் இந்த திட்டம் மிக சிறப்பான திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடாவின் இன்ட்ரா வி10 மினி ட்ரக்குகளே நடமாடும் ஷோரூம்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றை இயக்குவதற்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது. இதன்படியே டாடா கார் டீலர்களை நடமாடும் ஷோரூமை இயக்க இருக்கின்றனர்.

நாடு முழுவதும் செய்யப்படும் பயணிகள் வாகன விற்பனையில் 40 சதவீதம் விற்பனை கிராமப்புறங்களில் இருந்தே கிடைக்கின்றன. இந்த நிலையைக் கருத்தில் கொண்டும் டாடா மோட்டார்ஸ் அனுபவ் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் வாயிலாக கூடுதலாக கிராமப்புற வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

அனுபவ் திட்டம் அறிமுகம் குறித்து நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவுகளின் தலைவர் ராஜன் அம்பா கூறியதாவது, "அனுபவ் திட்டத்தை இந்தியாவில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைக்கின்றோம். வழக்கமான செங்கல்களால் ஆன கட்டிட ஷோரூம்களின் பயன்பாட்டை குறைக்க இது உதவும். அதேவேலையில், நிறுவனத்தின் மீது நம்பிக்கையை வரவைக்க இந்த நடவடிக்கை உதவும். அனைவராலும் எளிதில் அணுகக் கூடியதாகவும் இது இருக்கும்" என்றார்.

டாடா மோட்டார்ஸ் அதன் புகழ்பெற்ற அல்ட்ராஸ் கார் மாடலை கூடுதல் சிறப்பானதாக மாற்றும் நோக்கில் புதிய அம்சத்தை அதில் வழங்கியிருக்கின்றது. நிறுவனம் ட்யூவல் க்ளட்ச் வசதியுடன் அல்ட்ராஸ் காரை உருவாக்கியிருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் தற்போது தொடங்கியிருக்கின்றது. அல்ட்ராஸ் ஓர் அதிக பாதுகாப்பான கார் மாடலாகும். ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை இந்த கார் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் சிறப்புமிக்க காரையே கூடுதல் சிறப்பான காராக அது மாற்றியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications