சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் காரில் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் எஸ்யூவி (Tata Harrier) காரில், 2 புதிய வண்ண தேர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. அவை ராயல் ப்ளூ மற்றும் ட்ராபிக்கல் மிஸ்ட் ஆகும். ஹாரியரின் மூன்று-வரிசை உடன்பிறப்பான டாடா சஃபாரி காரிடம் இருந்து இந்த வண்ண தேர்வுகள் பெறப்பட்டுள்ளன. இந்த 2 வண்ண தேர்வுகளும் ஏற்கனவே டாடா சஃபாரி காரில் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஹாரியரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

2 புதிய வண்ண தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவி தற்போது ஒட்டுமொத்தமாக 7 வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் கலர் பேலட் தற்போது டேடோனா க்ரே, ஆர்கஸ் ஒயிட், கேலிப்சோ ரெட், ஒபேரான் பிளாக் (டார்க் எடிசன்), க்ராஸ்லேண்ட் பீஜ் (காஸிரங்கா எடிசன்) மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் ப்ளூ மற்றும் ட்ராபிக்கல் மிஸ்ட் ஆகிய வண்ணங்களை உள்ளடக்கியுள்ளது.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஆனால் 2 புதிய வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தவிர, டாடா ஹாரியர் எஸ்யூவி காரில் தற்போது வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. டாடா ஹாரியர் எஸ்யூவி காரில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர், க்ரையோடெக் டீசல் இன்ஜின் ஆகும்.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஒரே ஒரு இன்ஜின் தேர்வுதான் என்றாலும் கூட, இந்த காரில் 2 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அவை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் ஆகும். மறுபக்கம் டாடா ஹாரியர் எஸ்யூவி காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

இதில் பனரோமிக் சன்ரூஃப், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் டாடா ஹாரியர் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. அதேபோல் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் டாடா ஹாரியர் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. இதில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

தற்போதைய நிலையில் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 14.65 லட்ச ரூபாய் ஆகும். இது ஆரம்ப நிலை XE வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டான XZA+ டார்க் ஆட்டோமேட்டிக் வேரியண்ட், 21.95 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்கள், டாடா ஹாரியர் எஸ்யூவியின் நேரடி போட்டியாளர்களாக உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், அடுத்த சில நாட்களில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

இது மேம்படுத்தப்பட்ட 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 2022 மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மே 11ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல் ஆகும்.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

இதை தொடர்ந்து 2022 டிகோர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. முன்னதாக வெகு சமீபத்தில் டாடா கர்வ் மற்றும் டாடா அவ்னியா என்ற பெயர்களில் 2 புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க... கெத்தான ஹாரியர் காரில் டாடா நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?

வரும் ஆண்டுகளில் இந்த கான்செப்ட் மாடல்கள் இறுதி வடிவம் பெற்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 3, 2022, 8:26 [IST]
English summary
Tata motors launches harrier with 2 new colour options details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+