பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் அனைத்து எஸ்யூவி கார் மாடல்களிலும் காசிரங்கா எடிசன் எனும் சிறப்பு பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காசிரங்கா எடிசன் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களிலேயே இச்சிறப்பு பதிப்பு காசிரங்கா எடிசனை அறிமுகம் செய்துள்ளது.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

அறிமுகமாக பஞ்ச் காசிரங்கா எடிசன் தேர்விற்கு ரூ. 8,58,900 என்ற விலையும், நெக்ஸான் காசிரங்கா எடிசனின் பெட்ரோல் தேர்விற்கு ரூ. 11,78,900 விலையும், டீசல் தேர்விற்கு ரூ. 13,08,900 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஹாரியர் கார் மாடலில் உருவாக்கப்பட்டுள்ள காசிரங்கா எடிசனுக்கு ரூ. 20,40,900 விலையும், சஃபாரி காசிரங்கா எடிசனுக்கு ரூ. 20,99,000 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

மேலே பார்த்த அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். இந்த சிறப்பு பதிப்புகள் பிரத்யேகமான நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. கிராஸ் லேண்ட் பீஜ் (GrassLand Beige) நிறம் மற்றும் பியானோ கருப்பு (Piano Black) நிறங்களால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

இதுதவிர, சேடின் பிளாக் (Satin Black) நிற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எம்பளம் காரின் முன் பக்க ஃபென்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இவையே இந்த புதிய காசிரங்கா எடிசனின் சிறப்புகளாகும். காசிரங்கா தேசிய பூங்காவில் இருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாகவே இச்சிறப்பு பதிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

இக்காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக கருப்பு நிற அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து எஸ்யூவி கார்களிலும் பீஜ் (Beige) நிற லெதர் இருக்கைகள், டிராபிகள் உட் (Tropical Wood) நிற டேஷ்போர்டு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

இத்துடன், சில இன்செர்ட்டுகள் எர்தி பீஜ் (Earthy Beige) நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், முன்பக்க இருக்கையின் ஹெட்ரெஸ்ட்டில் இரு காண்டா மிருகங்கள் எதிரெதிரில் நிற்கும் வகையில் எம்பளம் பதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு அம்சங்களை மட்டுமே காசிரங்கா எடிசன் எஸ்யூவிக்கள் பெற்றிருக்கின்றன.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

வேறெந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் இக்காரில் செய்யப்படவில்லை. டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்ட வேரியண்டுகளில் மட்டுமே இந்த காசிரங்கா எடிசனை உருவாக்கி இருக்கின்றது. அதாவது, பஞ்ச் காரின் கிரியேட்டீவ் எம்டி, கிரியேட்டீவ் எம்டி-ஐஆர்ஏ, கிரியேட்டீவ் ஏஎம்டி மற்றும் கிரியேட்டீவ் ஏஎம்டி-ஐஆர்ஏ ஆகிய ட்ரிம்களில் மட்டுமே காசிரங்கா எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும்.

பன்மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றம்... அனைத்து டாடா எஸ்யூவி மாடல்களிலும் காசிரங்கா எடிசன் அறிமுகம்!

இதேபோல், நெக்ஸான் எஸ்யூவி காரின் எக்ஸ்இசட்-ப்ளஸ் (பி) மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் (பி) ஆகிய ட்ரிம்களிலேயே நெக்ஸான் காசிரங்கா எடிசன் சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. டாடா ஹாரியர் காசிரங்கா எடிசன் எக்ஸ்இசட்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ-ப்ளஸ் ஆகிய ட்ரிம்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

Article Published On: Wednesday, February 23, 2022, 19:26 [IST]
English summary
Tata motors launches special kaziranga edition of its suv s
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+