உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் அதன் குறைந்த விலை டிகோர் இவி மின்சார காரை நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது டாடா மோட்டார்ஸ். இந்நிறுவனம், நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி என இரு விதமான எலெக்ட்ரிக் கார்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவையிரண்டுமே, தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் சற்று விலைக் குறைவானவை ஆகும்.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

இதனால்தான் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை இரு எலெக்ட்ரிக் கார்களும் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவதாக ஓர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

டாடா நிறுவனம் அதன் புகழ்பெற்ற அல்ட்ராஸ் மாடல் அடிப்படையிலான எலெக்ட்ரிக் காரையே மூன்றாவது மின்சார காராக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அல்ட்ராஸ் ஓர் பிரீமியம் தரம் கொண்ட அதிக பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார் மாடலாகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை மிக விரைவில் இந்தியாவில் வெளியீட்டைப் பெற இருக்கின்றது.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மலிவு விலை மின்சார கார் மாடலான டிகோர் இவி-யை நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கி வரும் எலெக்ட்ரிக் கார்களிலேயே விலை குறைவான மின்சார கார் மாடலாக டிகோர் இவி இருக்கின்றது. இது ரூ. 12.24 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரையே டாடா தற்போது நேபாளத்தில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

இந்தியாவின் மின வாகன சந்தையை போலவே நேபாள எலெக்ட்ரிக் வாகன சந்தையை ஒரு கை பார்க்கும் வகையில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் அங்கு களமிறக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 29.99 லட்சம் தொடங்கி 32.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

இதன் வாயிலாக இந்திய ரூபாய் மதிப்பில் 18.76 லட்சம் முதல் ரூ. 20.64 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஏற்கனவே, நெக்ஸான் இவி மின்சார காரும் நேபாளத்தில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் 2021ம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே அறிமுகம் செய்யப்பட்டது.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

டாடா டிகோர் இவி 8 ஆண்டுகள் மற்றும் 1.60 ஆயிரம் கிமீ வாரண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் டிகோர் இவி காரில் 26kWh IP 67 தர பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 306 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

உள் நாட்டுக்கு புதிய அல்ட்ராஸ் இவி... அண்டை நாட்டுக்கு டிகோர் இவி! அதிரடி நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்!

இக்காரில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டார் 74 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. மேலும், ஒட்டுமொத்தமாக எக்ஸ்இ, எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 31, 2022, 19:15 [IST]
English summary
Tata motors launches tigor ev in neighbour country nepal
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+