ரூ. 21,000 மட்டுமே... Tata Altroz ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் காருக்கான புக்கிங்குகள் தொடக்கம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அல்ட்ராஸ் ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (Altroz Dual-Clutch Automatic) வேரியண்டிற்கான புக்கிங் பணிகளை நாட்டில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டாடா நிறுவனத்தின் முதன்மையான பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராக அல்ட்ராஸ் (Tata Altroz) காட்சியளிக்கின்றது. இந்த காரில் நிறுவனம் மிக விரைவில் டிசிஏ எனும் ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (Dual-Clutch Automatic) அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ட்யூவல் க்ளட்ச் தானியங்கி வசதிக் கொண்ட அல்ட்ராஸ் காருக்கான புக்கிங் பணியை தற்போது தொடங்கியிருக்கின்றது. மிக விரைவில் இக்கார் வரவிருப்பதை முன்னிட்டு இந்த நடவடிக்கையை டாடா கையில் எடுத்திருக்கின்றது.

டாடா அல்ட்ராஸ் நிறுவனத்தின் முதன்மையான பிரீமியம் கார் மட்டுமல்ல. அது, இந்தியாவின் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காரும் கூட. இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகும். குளோபல் என்சிஏபி நடத்திய பாதுகாப்பு குறித்த ஆய்விலேயே இந்த தரமான ரேட்டிங்கை அல்ட்ராஸ் பெற்றது.

இத்தகைய சிறப்புமிக்க காரையே இன்னும் கூடுதல் சிறப்பான மாடலாக மாற்றும் விதமாக டாடா மோட்டார்ஸ் அல்ட்ராஸ் கார் மாடலில் ட்யூவல் க்ளட்ச் தானியங்கி வெர்ஷனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய சாலைகளுக்கு உகந்த ஓர் அம்சமாக ட்யூவல் க்ளட்ச் தொழில்நுட்பம் பார்க்கப்படுகின்றது.

இது இயக்கத்தை மிக ஸ்மூத்தானதாகவும், இடையூறு இல்லாததாகவும் மாற்ற உதவும். இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த தொழில்நுட்பத்தை டாடா உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய அம்சம் கொண்ட அல்ட்ராஸ் காரை புக் செய்ய விரும்புவோர் டாடாவின் அதிகாரப்பூர்வ தளம் அல்லது விற்பனையாளர்களை விசிட் செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. முன் பதிவு கட்டணமாக நாங்கள் மேலே கூறியதைப் போல் ரூ. 21 ஆயிரம் வசூலிக்கப்படும்.

இக்காரின் அறிமுகம் இம் (மார்ச்)-மாதத்தின் மத்தியிற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் காரை இதுவரை 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில், பலர் இக்காரில் ட்யூவல்-க்ளட்ச் அம்சம் இல்லாததை பெரும் குறையாகக் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே இக்குறையைத் தீர்க்கும் பொருட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக விரைவில் ட்யூவல் க்ளட்ச் அம்சத்துடன் அல்ட்ராஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி பற்றிய விபரம் வெளியாகவில்லை. மிக விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசிஏ தொழில்நுட்பம் கொண்ட டாடா அல்ட்ராஸ் புதிய நிற தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒபெரா ப்ளூ நிற தேர்விலேயே அது கிடைக்க இருக்கின்றது. அதேநேரத்தில் இந்த அம்சமானது உயர் நிலே வேரியண்டுகளான எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் ஆகியவற்றிலேயே கிடைக்கும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனையில் இருக்கும் டாடா அல்ட்ராஸ் 1.2 லிட்டர் ரெவ்ட்ரோன் பெட்ரோல் எஞ்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரை மிக விரைவில் டாடா நிறுவனம் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அண்மைக் காலங்களாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. எனவே இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் அல்ட்ராஸ் இவி-யையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா அல்ட்ராஸ் தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டொயோட்டா க்ளான்ஸா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications