அஞ்சு, பத்து இல்லைங்க... 76,000-க்கும் அதிகமான டாடா வாகனங்கள் போன மாசம் விற்பனையாகியிருக்கு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த மே மாதத்தில் பிரமாண்ட விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2022 மே மாதத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் என்ன மாதிரியான விற்பனை வரவேற்பைப் பெற்றன என்பது பற்றிய விபரங்கள் வெளி விர தொடங்கியிருக்கின்றன. நேற்றைய தினத்தோடு மே மாதம் முடிவடைந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் விற்பனை புள்ளி விபரங்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

அந்தவகையில், டாடா மோட்டார்ஸும் அது சென்ற மாதத்தில் எத்தகைய விற்பனை சூழலை இந்தியாவில் சந்தித்தது என்பது பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 2021 மே மாதத்தைக் காட்டிலும் 2022 மே மாதத்தில் 186 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2022 மே மாதத்தில் 76,210 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. நிறுவனம் மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதை இந்த எண்ணிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளுக்கு அண்மைக் காலங்களாக மவுசு அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

நிறுவனம் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பை வழங்கக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. நெக்ஸான், பஞ்ச், அல்ட்ராஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றன. இதேபோல், நிறுவனத்தின் பிற தயாரிப்புகளும் பாதுகாப்பு குறித்த ஆய்வில் நல்ல மதிப்பெண்களையே பெற்றிருக்கின்றன.

இந்த நிலை டாடாவின் தயாரிப்புகளுக்கு நல்ல மவுசை நாட்டில் ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் விளைவாக உள் நாட்டு சந்தையில் பஞ்ச், நெக்ஸான், சஃபாரி மற்றும் ஹாரியர் போன்ற கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே 186 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்று நிறுவனம் அசத்தியிருக்கின்றது.

76,210 என்ற ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 74,755 யூனிட்டுகள் உள்நாட்டு சந்தையில் விற்பனையாகியிருக்கின்றன. இதில், உள்நாட்டில் விற்பனைச் செய்யப்பட்ட வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை 32,818 ஆகும். இதே பிரிவில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் 11,401 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

பயணிகள் வாகன பிரிவில் உள்ள டாடாவின் தயாரிப்புகளுக்கும் உள்நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. ஐசிஇ (எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்கள்) மற்றும் மின்சார வாகனங்கள் ஆகிய இரண்டிற்கும் அமோகமான வரவேற்புக் கிடைத்துள்ளது. 39,887 ஐசிஇ வாகனங்களும், 3,454 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனையாகியுள்ளன.

டாடா எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆம், டாடாவின் எலெக்ட்ரிக் கார்கள் 626 சதவீதம் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் வெறும் 476 யூனிட் மட்டுமே டாடா எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

ஆனால், 2022 மே மாதத்திலோ பல மடங்கு உயரந்து 3,454 யூனிட்டுகள் வரை டாடா மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது மாபெரும் வளர்ச்சியாகும். இதுபோலவே ஐசிஇ பயணிகள் வாகனமும் 171 சதவீதம் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 14,705 யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனையாகியிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா மோட்டார்ஸ் இதுபோன்று விற்பனை வளர்ச்சியைப் பெறுவது இது முதல் முறை அல்ல. சென்ற ஆண்டில் இருந்தே நிறுவனம் வளர்ச்சியையே டாடா பெற்று வருகின்றது. இது டாடாவின் தயாரிப்பிற்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்திருப்பதை உணர்த்துகின்றது.

| உள்நாட்டு வாகன விற்பனை விபரம் | |||
| Category | May 2022 | May 2021 | % change (Y-o-Y) |
| Total Sales | 74,755 | 24,552 | 204% |
| உள்நாட்டில் விற்பனையாகிய வர்த்தக வாகனங்கள் விபரம் | |||
| Category | May 2022 | May 2021 | % change (Y-o-Y) |
| M&HCV | 8,409 | 2,583 | 226% |
| I&LCV | 4,474 | 964 | 364% |
| Passenger Carriers | 3,632 | 691 | 426% |
| SCV cargo and pickup | 14,899 | 5,133 | 190% |
| Total CV Domestic | 31,414 | 9,371 | 235% |
| CV Exports | 1,404 | 2,030 | -31% |
| Total CV | 32,818 | 11,401 | 188% |

| உள்நாட்டில் விற்பனையாகிய பயணிகள் வாகனங்களின் விபரம் | |||
| Category | May 2022 | May 2021 | % change (Y-o-Y) |
| PV ICE | 39,887 | 14,705 | 171% |
| PV EV | 3,454 | 476 | 626% |
| Total PV Domestic | 43,341 | 15,181 | 185% |


Click it and Unblock the Notifications








