வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக (பயணிகள் வாகனங்கள் + கமர்ஷியல் வாகனங்கள்) விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கார்கள் போன்ற பயணிகள் வாகனங்களின் விற்பனையில் எந்த அளவிற்கு கொடிக்கட்டி பறக்கிறதோ அந்த அளவிற்கு கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் முன்னணியில் உள்ளது.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

கடந்த மாதத்தில் இந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாக 66,307 யூனிட் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை உடன் ஒப்பீடுகையில் 24% அதிகமாகும். 66,307 யூனிட்களில் மொத்தம் 35,299 பயணிகள் வாகனங்கள் உள்ளன. இதில் 2,255 எலக்ட்ரிக் வாகனங்கள் அடங்குகின்றன.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

மொத்தமாக 2021-22ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர்- டிசம்பர்) 1,89,531 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021ஆம் நிதியாண்டை காட்டிலும் 26% அதிகமாகும். ஏனெனில் 2020 அக்டோபர் - டிசம்பர் மாதம் வரையில் 1,50,961 யூனிட் வாகனங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

கார்கள் விற்பனையை பொருத்தவரையில், டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டில் பல கவர்ச்சிக்கரமான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மைக்ரோ-எஸ்யூவி காரான பஞ்ச், டாடாவின் இரண்டாவது எலக்ட்ரிக் காரான டிகோர் இவி உள்ளிட்டவை கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

இவற்றை தொடர்ந்து இந்த ஆண்டில் டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் காம்பெக்ட் செடான் கார்களின் சிஎன்ஜி வெர்சன்களை அறிமுகப்படுத்த டாடா தயாராகி வருகிறது. இதில் டிகோர் செடானானது எரிபொருள் என்ஜின், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என மூன்று விதமான தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கவுள்ள முதல் இந்திய காராக விளங்கவுள்ளது.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

இதற்கிடையில் பயணிகள் வாகனங்களின் விலைகளையும் அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இந்த ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளன. இதற்குமுன் கடைசியாக 2021 நவம்பர் மாதத்தில் கார்களின் விலைகளை டாடா நிறுவனம் அதிகரித்து இருந்தது. இந்தியாவிலேயே தோன்றிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உள்நாட்டில் அதன் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கவுள்ளது.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

இதற்காக மஹாராஷ்டிரா அரசாங்கத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ள டாடா நிறுவனம் அந்த மாநிலத்தில் புதியதாக தொழிற்சாலையை நிறுவவுள்ளது. இந்த புதிய டாடா தொழிற்சாலை வருடத்திற்கு 35,000 வாகனங்களை தயாரிக்கும் திறனுடன் கட்டமைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக வரும் ஆண்டுகளில் புதிய புதிய பிரிவுகளில் கார்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டிருப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிக பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்த்ரா கருத்து தெரிவிக்கையில், "குறைக்கடத்திகளுக்கு பற்றாக்குறை காரணமாக தயாரிப்பு பணிகளில் தடைகள் ஏற்பட்ட போதிலும், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வணிக வளர்ச்சி பயணத்தில் பல புதிய மைல்கற்களை அமைத்துள்ளது.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

இத்துடன், 2021ஆம் காலாண்டர் ஆண்டில் 3,31,178 யூனிட் வாகனங்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. நிறுவனம் முதன்முதலாக நிறுவப்பட்டதில் இருந்து டாடா மோட்டார்ஸ் ஒரு ஆண்டில் பதிவு செய்துள்ள அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இன்னும் குறைக்கடத்திகளின் பிரச்சனை தீரவில்லை. இது வரும் நாட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, கொரோனா வைரஸின் உருமாற்றங்களையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

இத்தகைய தடைகள் இருக்கும்போதிலும், வணிக திட்டங்களில் சுறுசுறுப்பாக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். மேலும், இந்த அபாயங்களை குறைக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார். டியாகோ & டிகோர் கார்களின் புதிய சிஎன்ஜி வெர்சன்களை போன்று இந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துவதற்கு ஏகப்பட்ட தயாரிப்புகளை டாடா நிறுவனம் தயார் செய்து வருகிறது.

வாகன விற்பனையில் வளர்ச்சியுடன் 2021ஐ நிறைவு செய்திருக்கும் டாடா!! மின்சார கார்களின் விற்பனையிலும் முன்னேற்றம்!

இந்த வகையில் அல்ட்ராஸ் மாடலில் புதியதாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. டாடா மோட்டார்ஸின் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸ் இந்திய சந்தையில் முதன்முதலாக 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற போட்டி மாடல்களை மட்டம் தட்டும் வகையில் டீசல் என்ஜின் தேர்வை அல்ட்ராஸ் பெற்றாலும், இதில் இன்னமும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படுவதில்லை.

Most Read Articles
English summary
Tata Motors registered total sales of 1,99,633 units in Q3 FY22.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X