டாடா கார்களின் விற்பனை உயர்வு... கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இவ்ளோ கார்கள் விற்பனையா? வேற லெவல்!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன்படி கடந்த மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 42,295 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 29,655 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இதன் மூலம் கார் விற்பனையில் 43 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 39,980 கார்களை விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 42,295 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வகையில் பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் டியாகோ, டிகோர், பன்ச், அல்ட்ராஸ், நெக்ஸான், சஃபாரி மற்றும் ஹாரியர் உள்ளிட்ட ஐசி இன்ஜின் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தனது ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்கிறது.

இதன்படி டியாகோ காரின் சிஎன்ஜி வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. அதே நேரத்தில் டிகோர் காரின் சிஎன்ஜி வெர்ஷனுடன், எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதுதவிர நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனையில் வைத்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தன் வசம் வைத்துள்ளது. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் அல்ட்ராஸ் காரின் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதன் மூலம் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இல்லை என்ற நீண்ட நாள் குறையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

குறிப்பாக வரும் ஏப்ரல் 6ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய எலெக்ட்ரிக் காருக்கான டீசர் வீடியோ ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் அது என்ன எலெக்ட்ரிக் கார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

அது டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இல்லாவிட்டால் தற்போது விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் மாடலாக இருக்கலாம். பெரிய பேட்டரி தொகுப்புடன் அதிக ரேஞ்ச் வழங்க கூடிய நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருவது தெரிந்த விஷயம்தான்.

எனவே இந்த இரண்டு கார்களில் ஏதேனும் ஒன்றை டாடா மோட்டார்ஸ் வரும் ஏப்ரல் 6ம் தேதி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவலுக்கு நாம் ஏப்ரல் 6ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். தற்போது வெளியாகி வரும் தகவல்கள் அனைத்து யூகங்களின் அடிப்படையிலானவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களுக்கு தற்போது இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. தனது கார்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐசி இன்ஜின், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் என பல்வேறு தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதுதவிர பாதுகாப்பிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்கள் தலைசிறந்து விளங்குகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய 3 கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீப காலமாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








