ஓஹோ... இவைதான் 2022 ஐபிஎல் மைதானங்களில் நிறுத்தப்பட உள்ள டாடா கார்களா!! கஸிரங்கா எஸ்யூவிகள்
2022 ஐபிஎல் போட்டிகளில் காட்சிப்படுத்தப்பட உள்ள டாடா கஸிரங்கா (Tata Kaziranga) கார்கள் தொடர்பான புதிய டீசர் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள விபரங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா க்ரூப் தான் 2022 ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சர் செய்ய உள்ளது நமக்கு தெரிந்த விஷயமே. விரைவில் நடைபெற உள்ள இந்த புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரின் போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய கஸிரங்கா எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் பிரபலமான டாடா எஸ்யூவி கார்களான நெக்ஸான், ஹெரியர், சஃபாரி மற்றும் சமீபத்திய அறிமுகமான பஞ்ச் மாடல்களில் கஸிரங்கா எடிசன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த கார்களின் அறிமுகத்தை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்திவிட்ட நிலையில், இந்த புதிய டாடா ஸ்பெஷல் எடிசன் கார்களை பற்றிய விபரங்கள் கடந்த சில வாரங்களாக வெளியாகி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள படங்களின் மூலம் இந்த புதிய கஸிரங்கா கார்கள் அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்றது என்பதுபோல் பயண சூழல்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் எஸ்யூவி கார்களை அஸ்ஸாம், தேசிய பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்றுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பிட்டு வருகிறது. இதற்கேற்ப இவை பழுப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன.

டாடா நெக்ஸான் தற்போதைக்கு டாடா நிறுவனத்தின் மிக சிறந்த எஸ்யூவி காராக விளங்குகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்களின் மூலமாக நெக்ஸான் கஸிரங்கா காரில் உட்புறத்தில் சூடான காற்றை வெளிப்படுத்தக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் காண்டாமிருகத்தின் உருவ படத்துடன் முன் இருக்கைகளின் தலையணை கவர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

மேலும், வெளிப்புறத்திற்கு ஏற்ப இதன் உட்புற இருக்கைகளும் பழுப்பு மற்றும் கருப்பு என்கிற இருவிதமான நிறங்களில் வழங்கப்பட உள்ளன. டாடா மோட்டார்ஸின் புதிய கஸிரங்கா எஸ்யூவி கார்கள் தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடியை பெற்று வரவுள்ளன. இது மற்ற வாகனங்களின் வெளிச்சத்தை பொறுத்து சாலை பார்வையை வழங்கக்கூடியது.

டாடா சஃபாரி கஸிரங்கா காரில் வயர் இல்லா சார்ஜிங் வசதி கொடுக்கப்பட உள்ளது. இந்த வசதி ஏற்கனவே சஃபாரியின் சில வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வருகிறது. டாடா பஞ்ச் மாடலின் கஸிரங்கா வெர்சன் மிக முக்கிய அம்சமாக டாடா மோட்டார்ஸின் IRA இணைப்பு கார் வசதிகளை பெற்றுவரவுள்ளது. இதன் மூலம் குரல் கட்டளைகளை பெறலாம்.

அத்துடன் இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் வழிக்காட்டுதல் & வானிலை வசதிக்கு வாட்3வோர்ட்ஸ் மென்பொருளுக்கும் இந்த இணைப்பு கார் வசதி வித்திடுக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச் கார்களில் ஹார்மனின் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்ட் அமைப்பு வழங்கப்படுகிறது. இவற்றுடன் இந்த மூன்று கஸிரங்கா எஸ்யூவி கார்களிலும் காற்று சுத்திகரிப்பான் நிலையான வசதியாக வழங்கப்பட உள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான நெக்ஸான், ஹெரியர், சஃபாரி & பஞ்ச் கார்களுக்கும் புதிய கஸிரங்கா கார்களுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது. புதிய ஸ்பெஷல் எடிசன்கள் என்பதை குறிக்கும் வகையில் காரை சுற்றிலும் ஒற்றை-கொம்பு கொண்ட காண்டாமிருகத்தின் உருவ லோகோகளை எதிர்பார்க்கலாம்.

கஸிரங்கா என்பது அஸ்ஸாம், தேசிய பூங்காவில் உள்ள அந்த ஒற்றை-கொம்பு காண்டாமிருகத்தின் பெயராக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். இந்த பெயருக்கு டாடாவின் தயாரிப்புகள் அனைத்து விதங்களிலும் பொருத்தமானவை. ஏனெனில் டாடா கார்கள் பொதுவாகவே மிக பாதுகாப்பானவை என்கிற கருத்து பரவலாக உள்ளது.

இதற்கு உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் இந்த டாடா எஸ்யூவி கார்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சாட்சியாகும். இவற்றின் விலைகளை எந்த அளவில் டாடா மோட்டார்ஸ் நிர்ணயிக்கும் என்பது தெரியவில்லை. இந்த எஸ்யூவி கார்களின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே புதிய கஸிரங்கா வெர்சன்கள் கொண்டுவரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.தற்சமயம் குறைந்தப்பட்சமாக பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி ரூ.5.65 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








