மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

கார் எத்தகைய தோற்றத்தில், அசத்தலான வசதிகளை கொண்டிருப்பினும், வாடிக்கையாளர்களின் முதலாவது கவனம் அதன் என்ஜின் அமைப்பிலும், அதன் செயல்படுதிறனிலும் தான் இருக்கும். அதிலிலும் குறிப்பாக நமது இந்திய வாடிக்கையாளர்கள் காரின் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலையும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் மைலேஜையுமே தீவிரமாக ஆராய்ந்து பார்ப்பர்.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

ஏனெனில் என்ஜினே எந்தவொரு வாகனத்திற்கும் இதயமாகும். இதனாலேயே என்ஜினை ஸ்மார்ட்டாகவும், கூடுதல் செயல்திறன்மிக்கதாகவும் வடிவமைக்க அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும், அதற்கென பிரத்யேகமாக ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தினை கொண்டுள்ளன. முன்னணி இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள் என்றால், நமது கவனத்திற்கு முதலாவதாக டாடா மோட்டார்ஸே வருகிறது.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

மிக பாதுகாப்பான பயணிகள்-கார்களை விற்பனை செய்யும் பிராண்ட் என்கிற பெயரை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் அதன் தற்போதைய மாடர்ன் கார்களில் ரெவோட்ரான் (பெட்ரோல்) மற்றும் ரெவோடார்க் (டீசல்) என்கிற இரு என்ஜின்களை கடந்த பல வருடங்களாக வழங்கி வருகிறது. முதன்முதலாக 2014இல் அறிமுகப்படுத்தப்பட்ட இவை இரண்டும் அதன்பின் தற்போதுவரையில் பல குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை பெற்றுவந்துள்ளன.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

இந்த இரு என்ஜின்களையும் டியாகோ ஹேட்ச்பேக் காரில் சுமார் 50,000கிமீ-க்கு உயர்-அழுத்த சகிப்புத்தன்மை சோதனைக்கு டாடா மோட்டார்ஸ் உட்படுத்தியது. சராசரியாக 120kmph வேகத்தில் இந்த சோதனை கிட்டத்தட்ட 18 நாட்களுக்கு முடிவில்லாமல் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மேம்பட்ட, எரிபொருள்-திறனுள்ள மற்றும் கடுமையாக சோதிக்கப்பட்ட ரெவோட்ரான் & ரெவோடார்க் என்ஜின்கள் கிடைத்தன.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

ரெவோட்ரான் என்ஜின்

ரெவோட்ரான் ஆனது இந்தியாவில் முதல்முறையாக உள்நாட்டில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு, ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் மல்டிபாயிண்ட் பெட்ரோல் என்ஜின் ஆகும். டர்போசார்ஜ்டு & நேச்சுரலி அஸ்பிரேட்டட் என இரு விதமான வெர்சன்களில் ரெவோட்ரான் என்ஜின்களை டாடா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

ரெவோட்ரானின் இந்த 3 & 4-சிலிண்டர் வெர்சன்கள் இரண்டும் ஈக்கோ, ஸ்போர்ட்ஸ் & சிட்டி ட்ரைவ் மோட்களை வழங்குகின்றன. ஆதலால் ரெவோட்ரான் என்ஜின் உடன் வாங்கப்படும் கார்களின் செயல்படுதிறனை ஓட்டுனர்கள் பயண சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும். அதாவது, சிட்டி மோடில் மைலேஜை அதிகரித்து கொள்ளலாம். அதேநேரம் ஸ்போர்ட்ஸ் மோடில் வேகமாக பயணிக்க கார் பெறும் இயக்க ஆற்றலை அதிகரித்து கொள்ளலாம்.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

இந்த 3 ட்ரைவிங் மோட்களும் மேம்பட்ட என்ஜின் மேலாண்மை அமைபுடன் கூடிய இறுக்கமான கிரான்கேஸுடன் குறைந்தப்பட்ச என்விஎச் நிலைகள் மற்றும் ஸ்மார்ட் இசியூ-விற்கு வழிவகுத்து, துல்லியமான கட்டுப்பாட்டை வழங்குகின்றன. ஏவிஎல் ஆஸ்திரேலியா, போஷ், ஐஎன்ஏ மற்றும் ஹனிவெல் ஆகியவற்றுடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய இந்த பெட்ரோல் என்ஜின் தற்சமயம் டியாகோ, அல்ட்ராஸ், டிகோர், பஞ்ச் மற்றும் நெக்ஸான் போன்ற அதிகளவில் விற்பனையாகக்கூடிய கார்களில் வழங்கப்படுகிறது.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

ரெவோடார்க் என்ஜின்

ரெவோட்ரான் என்ஜினை போல் டாடா மோட்டார்ஸின் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் குடும்பமும் அதி செயல்திறனை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரெவோடார்க் டீசல் என்ஜின்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்ட ஆற்றல் நிரம்பிய மற்றும் நிலையான சாலை செயல்படுதிறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

சுத்திகரிப்பு, பொருளாதாரம் மற்றும் செயல்திறன் போன்ற அளவுருக்களில் உலகளவில் ரெவோடார்க் என்ஜின் தரப்படுத்தப்பட்டுள்ளது. ரெவோடார்க் டீசல் என்ஜினும் அதன் இசியூ மூலமாக வெவ்வேறான ட்ரைவ் மோட்களை வழங்குகிறது. இந்த டீசல் என்ஜின் டாடா மோட்டார்ஸின் அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் கார்கள் மட்டுமே தற்போதைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

க்றையோடெக் டீசல்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் சமீபத்திய என்ஜினாக க்றையோடெக் டீசல் என்ஜின் விளங்குகிறது. 4-சிலிண்டர் டீசல் என்ஜினான இது புத்திசாலித்தனமான மேலாண்மை அமைப்பு மற்றும் வெளியேற்றத்திற்கு-பிந்தைய நடைமுறைகளினால் மிகவும் குறைந்த அளவிலான கார்பனையே வெளியேற்றுகிறது.

மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் என்ஜின்கள் எந்த அளவிற்கு ஸ்பெஷலானவை? ரெவோட்ரான் & ரெவோடார்க்...

இவற்றுடன் அதிநவீன எலக்ட்ரானிக் கண்ட்ரோல் வெவ்வேறான புவியியல் டர்போசார்ஜர் (eVGT)-ஐயும் பெறுவதால் க்றையோடெக் டீசல் என்ஜினை பெறும் கார்களில் பிக்அப் ஆனது மிக சிறப்பானதாக கிடைக்கிறது. அத்துடன் இந்த என்ஜினை கொண்ட கார்களை எந்தவொரு சாலைக்கும் பயமின்றி கொண்டு செல்லலாம். இந்த ஆற்றல்மிக்க டீசல் என்ஜின் ஆனது தற்சமயம் சற்று விலைமிக்க டாடா கார்களான ஹெரியர் & சஃபாரியில் பொருத்தப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2022, 15:15 [IST]
English summary
Tata motors s line up of engines explained details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+