சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டியாகோ & டிகோர் சிஎன்ஜி வேரியண்ட்களின் முதல் டிவிசி (தொலைக்காட்சி கமர்ஷியல்) வீடியோ டாடா நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

பெட்ரோல் & டீசல் விலைகள் விண்ணை தொட்டு வருவதையடுத்து, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் கார்களை சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) தேர்வுகளில் விற்பனை செய்ய தயாராகி வருகின்றன.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த வகையில் சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து களமிறக்கப்பட்ட சிஎன்ஜி கார்கள் தான் டியாகோ ஐசிஎன்ஜி மற்றும் டிகோர் ஐசிஎன்ஜி ஆகும். இதில் ஹேட்ச்பேக் காரான டியாகோ ஐசிஎன்ஜி வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.6.09 லட்சமாகவும், டிகோர் ஐசிஎன்ஜி செடான் வேரியண்ட்டின் விலை ரூ.7.69 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

இவை இரண்டிற்குமான முன்பதிவுகளை டீலர்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரு சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்தும் வகையில் முதல் டிவிசி வீடியோவினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.

மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களை போல் சிஎன்ஜி வேரியண்ட்களை காரின் ஆரம்ப நிலை மற்றும் மத்திய வேரியண்ட்களில் வழங்காமல், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் புதிய சிஎன்ஜி வேரியண்ட்களை மத்திய மற்றும் டாப் வேரியண்ட்களில் வழங்கியுள்ளது. இதனால் எந்தவொரு வசதியையும் இழக்காமல் சிஎன்ஜி வேரியண்ட்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

பொதுவாகவே டாடா மோட்டார்ஸ் பாதுகாப்பான கார்களுக்கு பெயர் பெற்றது. டாடா டியாகோ & டிகோர் மாடல்கள் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் பயணிகள் & வாகன பாதுகாப்பிற்கு 4 நட்சத்திரங்களை பெற்றிருந்தன. இந்த பாதுகாப்பு தரம் புதிய ஐசிஎன்ஜி வேரியண்ட்களிலும் எந்தவொரு குறையும் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

தற்போது வெளியிடப்பட்டுள்ள டிவிசி வீடியோவின் மூலம் இந்த இரு சிஎன்ஜி வாகனங்களும் ஆற்றலை ஏற்கக்கூடிய உடல் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும் இவற்றில் எரிபொருள் நிரப்பும் பகுதியின் மூடி திறந்திருந்தால் எச்சரிக்கும் மைக்ரோஸ்விட்ச்சும் நிலையான வசதியாக வழங்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

அதி வலிமைமிக்க இரும்பு மற்றும் துரும்பிடிக்காத பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஐசிஎன்ஜி வேரியண்ட்களில் கசிவு கண்டறிதல் வசதியையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், சிஎன்ஜி மோடில் வைத்தே காரை ஸ்டார்ட் செய்யும் வசதி, அதி விரைவாகவும் பாதுகாப்பாகவும் சிஎன்ஜி எரிபொருளை நிரப்புவதற்கான தொழிற்நுட்ப வசதிகளும் இந்த சிஎன்ஜி வேரியண்ட்களில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

டாடா டியாகோ சிஎன்ஜி எரிபொருள் மாடலானது எக்ஸ்.இ, எக்ஸ்.எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்.இசட் ப்ளஸ் என நான்கு வேரியண்ட்களிலும், செடான் மாடலான டிகோர் சிஎன்ஜி ஆனது எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட் ப்ளஸ் என இரு விதமான வேரியண்ட்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டியாகோவில் வழக்கமான நிறத்தேர்வுகளுடன் மிட்நைட் ப்ளம் என்கிற நிறத்தேர்வு புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

அதேபோல், டிகோர் காரில் புதியதாக மேக்னெட்டிக் ரெட் என்ற அடர் சிவப்பு நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி டாடா டியாகோ & டிகோர் கார்களின் டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை. இவற்றின் முன்பக்கத்தில் க்ரோம் அலங்கரிப்புகளுடன் முகப்பு க்ரில், ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.பின்பக்கத்தில் டெயில்கேட்டில் சிஎன்ஜி பேட்ஜ் தனித்து தெரிவதற்காக பொருத்தப்பட்டுள்ளது.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

உட்புறத்தில் ஹார்மன் நிறுவனத்தின் 7 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கீழிறக்கும் வசதி உடன் ஜன்னல் கண்ணாடிகள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

சிஎன்ஜி கார்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது டாடா மோட்டார்ஸ்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

டிகோர் நடுத்தர அளவு செடான் காரின் புதிய ஐசிஎன்ஜி வேரியண்ட்டில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் இரட்டை நிற மேற்கூரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. டாடா டியாகோ & டிகோர் கார்களின் சிஎன்ஜி மாடல்கள் வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் 100 கிலோ வரையில் எடைமிக்கதாக உள்ளன.

Article Published On: Thursday, January 20, 2022, 11:31 [IST]
English summary
Tata motors shares new tvc of tiago and tigor cng models
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+