பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் 2022 ஜூலை மாதத்தில் போட்டியாளர்களைக் கதறவிடும் அளவிற்கு மிக சூப்பரான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை நிலவரம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருப்பதை இந்த தகவல்கள் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. 2022 ஜூலை மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 47,505 யூனிட் டாடா வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

இது கடந்த 2021ம் ஆண்டைக் காட்டிலும் பல மடங்கும் அதிகம் ஆகும். விபரமாக கூற வேண்டும் எனில் சுமார் 57 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கின்றது. நிறுவனம் இதுபோன்று அதிக விற்பனை வளர்ச்சியை நடப்பாண்டில் பதிவு செய்வது முதல் முறையல்ல.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

கடந்த சில மாதங்களாகவே நிறுவனம் தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றது. நிறுவனத்தின் சிஎன்ஜி தயாரிப்புகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. டாடா தற்போது டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களிலேயே சிஎன்ஜி தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

இவற்றிற்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைத்துள்ளது. சுமார் 5,293 யூனிட் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்களுக்கும் மக்கள் மத்தியில் சூப்பரான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. ஒட்டுமொத்த விற்பனையில் 64 சதவீதம் டாடாவின் எஸ்யூவி கார்களே விற்பனையாகியுள்ளன.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

அதிலும், டாடா நிறுவனத்தின் புதுமுக கார் மாடலான பஞ்சிற்கு மிக மிக சூப்பரான வரவேற்பு மக்களிடையே கிடைத்திருக்கின்றது. இந்த ஒற்றை கார் மாடல் மட்டும் 11,007 யூனிட்டுகள் 2022 ஜூலையில் விற்பனையாகியுள்ளன. விரைவில் இக்கார் டாடா நெக்ஸானின் இடத்தைப் பிடித்துவிடும் என கூறுமளவிற்கு இக்காருக்கு நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக நெக்ஸான் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா நிறுவனம் பஞ்ச் காரை 2021 அக்டோபர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் மலிவு விலை மற்றும் மிக சிறிய எஸ்யூவி ரக காராக பஞ்ச் இருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

டாடாவின் மின்சார வாகனங்களும் மிக சூப்பராக விற்பனையாக தொடங்கியிருக்கின்றன. நிறுவனம் நெக்ஸான் இவி, நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்திய மின்வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

இவற்றிற்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இதன் விளைவாக சுமார் 566 சவீதம் விற்பனை வளர்ச்சியைக் கடந்த 2021 ஜூலையைக் காட்டிலும் நடப்பாண்டு ஜூலையில் பெற்றிருக்கின்றது. அதாவது, நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் ஒட்டுமொத்தமாக 4,022 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

ஆமாங்க 2021 ஜூலையில் இதே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் வெறும் 604 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. டாடா மோட்டார்ஸ் 2022 ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 45,197 யூனிட்டுகள் வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் ஜூலை மாத விற்பனையை ஒப்பிட்டு பார்த்தாலும் அது விற்பனை வளர்ச்சியையேப் பெற்றிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

சுமார் 9.5 சதவீத விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக, டாடாவின் தயாரிப்புகள் தொடர்ச்சியாக விற்பனையில் ஏறுமுகத்தைச் சந்தித்து வருகின்றது. நிறுவனத்தின் மிக சிறந்த கார் மாடலாக நெக்ஸான், பஞ்ச், டியாகோ, டிகோர் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றைப் போலவே சஃபாரி மற்றும் ஹாரியர் மாடலுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே நடந்து முடிந்த ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 47,505 யூனிட்டு வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. பயணிகள் வாகனங்களைப் போல் வணிக பிரிவில் உள்ள வாகனங்களும் சூப்பராக விற்பனையாகியிருக்கின்றன. சுமார் 34,154 யூனிட்டுகள் டாடாவின் வணிக வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

பிரம்மிக்க வைக்கும் விற்பனை வளர்ச்சியில் டாடா... போட்டியாளர்களை கதற விட்டிருக்கு!

இதே வணிக வாகனங்கள் 2021 ஜூலை மாதத்தில் வெறும் 23,848 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதைக்காட்டிலும் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 43 சதவீதம் அதிக வாகனங்களை டாடா விற்பனைச் செய்திருக்கின்றது. இவற்றை வைத்து பார்க்கையில் மக்களின் மத்தியில் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மேலும் பல மடங்கு மதிப்பு அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata motors sold 47505 unit vehicles in july 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X