விழா காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பை களமிறக்கிய டாடா.. 'ஜெட் எடிசன்' பெயரில் அறிமுகம்! எல்லாமே அழகா இருக்கு
விழா காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) சிறப்பு பதிப்பு கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) சமீபத்தில் ஓர் டீசர் வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த டீசர் வீடியோவில் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளான சஃபாரி, ஹாரியர் மற்றும் நெக்ஸான் உள்ளிட்ட கார் மாடல்கள் இடம் பெற்றிருந்தன. அனைத்து வாகனங்களும் தெளிவாக தென்படாத வகையில் அந்த டீசர் வீடியோவின் காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஏற்கனவே, இந்த கார் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றநிலையில் எதற்காக இந்த மாதிரியான ஓர் டீசர் வீடியோவை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது என்ற கேள்வியே ஒட்டுமொத்த வாகன பிரியர்கள் மத்தியிலும் எழும்பியது.

இந்த கேள்விக்கு விடை கொடுக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் தற்போது தரமான சம்பவத்தை செய்திருக்கின்றது. டீசர் வீடியோவில் இடம் பெற்றிருந்த அனைத்து வாகனங்களையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவை, ஸ்பெஷல் பதிப்பு வாகனங்கள் ஆகும். ஆமாங்க, டாடா நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான சஃபாரி, ஹாரியர் மற்றும் நெக்ஸான் ஆகியவற்றை சிறப்பு பதிப்புகளாக உருவாக்கி அவற்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஜெட் எடிசன் (Jet Edition) எனும் பெயரிலேயே அந்த சிறப்பு பதிப்பு வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று மாடல்களும் நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களாக விளங்குகின்றன. குறிப்பாக, நெக்ஸான் டாடாவின் டாப் செல்லிங் எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது. இதேபோல், ஐந்து இருக்கைகள் வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் சஃபாரியும், ஆறு மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹாரியர் கார் மாடலும் நிறுவனத்தின் சூப்பரான விற்பனையைப் பெறும் மாடல்களாக இருக்கின்றன.

இவற்றின் பக்கம் மக்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் பொருட்டே தற்போது 'ஜெட் எடிசன்' எனும் சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. சஃபாரி மற்றும் நெக்ஸான் ஆகிய கார் மாடல்களின் நான்கு வேரியண்டுகளிலும், ஹாரியர் மாடலின் இரு வேரியண்டுகளிலும் இந்த ஜெட் எடிசன் சிறப்பு பதிப்புகள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விபரங்கள் இதோ:
- சஃபாரி எக்ஸ்இசட் பிளஸ், டீசல், 6 சீட்டர்
- சஃபாரி எக்ஸ்இசட்ஏ பிளஸ், டீசல், 6 சீட்டர்
- சஃபாரி எக்ஸ்இசட் பிளஸ், டீசல், 7 சீட்டர்
- சஃபாரி எக்ஸ்இசட்ஏ பிளஸ், டீசல், 7 சீட்டர்
- எக்ஸ்இசட் பிளஸ் (பி), டீசல்
- எக்ஸ்இசட்ஏ பிளஸ் (பி), டீசல்
- எக்ஸ்இசட் பிளஸ் (பி), பெட்ரோல்
- எக்ஸ்இசட்ஏ பிளஸ் (பி), பெட்ரோல்
சஃபாரியின் இந்த தேர்வுகளிலேயே ஜெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், நெக்ஸான் கார் மாடலின்
ஆகிய தேர்வுகளில் ஜெட் எடிசன் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இந்த எடிசன் ஹாரியர் கார் மாடலின் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் (பி) ஆகிய இரு டீசல் மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

மேலே பார்த்த ஜெட் சிறப்பு பதிப்புகளின் விலை விபரத்தை கீழே பார்க்கலாம்:
| டாடா ஜெட் எடிசன் | விலை (Ex-showroom Delhi) |
| Safari XZ+ (Diesel 6 seater) | ₹21.45 lakhs |
| Safari XZA+ (Diesel 6 seater) | ₹22.75 lakhs |
| Safari XZ+ (Diesel 7 seater) | ₹21.35 lakhs |
| Safari XZA+ (Diesel 7 seater) | ₹22.65 lakhs |
| Harrier XZ+ (Diesel) | ₹20.90 lakhs |
| Harrier XZA+ (Diesel) | ₹22.20 lakhs |
| Nexon XZ+ (P) (Diesel) | ₹13.43 lakhs |
| Nexon XZA+ (P) (Diesel) | ₹14.08 lakhs |
| Nexon XZ+ (P) (Petrol) | ₹12.13 lakhs |
| Nexon XZA+ (P) (Petrol) | ₹12.78 lakhs |

ஜெட் எடிசனின் சிறப்புகள் என்ன?
வழக்கமான கார் மாடல்களில் இருந்து கணிசமான அளவில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையிலேயே இந்த ஜெட் எடிசன் சிறப்பு பதிப்பை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியிருக்கின்றது. அதாவது, அதிக லக்சூரி மற்றும் கிராண்டான தோற்றம் கொண்டதாக ஜெட் எடிசன் பதிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகையால், இந்த வாகனத்தில் பயணிக்கும்போது பிசினஸ் வகுப்பு வாகனங்களில் பயணிப்பதைப் போன்று அனுபவம் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனித்துவமான நிறத்தால் இக்காரை டாடா அலங்கரித்திருக்கின்றது. எர்த்தி ப்ரோன்ஸே எனும் நிறம் காரின் உடல் பகுதிக்கும், பிளாட்டினம் சில்வர் நிறம் காரின் ரூஃபிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஜெட் எடிசனை அட்டகாசமான வாகனமாக காட்சியளிக்கச் செய்கின்றது. இதுதவிர, ஜெட் பிளாக் அலாய் வீல்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இவை பல மடங்கு அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது.

தொடர்ந்து, ஜெட் எடிசனின் உட்பக்கமும் புதிய அம்சங்களால் மற்றும் நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், ஓய்ஸடர் வெள்ளை மற்றும் கிராணைட் பிளாக்கால் காரின் உட்பக்கம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டெக்னோ ஸ்டீல் ப்ரோன்ஸே நிறத்தைக் கொண்ட மிட்-பேட் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கதவுகள் மற்றும் ஃப்ளூர்களிலும் ப்ரோன்ஸே அக்செண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை வழக்கமான டாடாவின் ஹாரியர், சஃபாரி மற்றும் நெக்ஸான் கார்களில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஜெட் எடிசன் ஹாரியர் மற்றும் சஃபாரி
அலங்காரத்தைப் போலவே பிரத்யேக அம்சங்கள் சிலவற்றை இந்த ஜெட் எடிசன் பதிப்புகளில் டாடா வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடலில் அதிகம் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அட்வான்ஸ்ட் இஎஸ்பி பாதுகாப்பு அம்சம், பேனிக் பிரேக் அலர்ட், ஆஃப்டர் இம்பேக்ட் பிரேக்கிங் போன்ற 14 பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்தவிர, கூடுதல் சிறப்பு வசதிகளாக சி டைப் யுஎஸ்பி சார்ஜர் அனைத்து இருக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், கார் ப்யூரிஃபையர் ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட அம்சங்களும் ஜெட் எடிசன் ஹாரியர் மற்றும் சஃபாரியில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஜெட் எடிசன் நெக்ஸான்:
மேலே பார்த்த ஜெட் எடிசன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் இடம் பெற்றிருப்பதைப் போலவே ஜெட் எடிசன் நெக்ஸானிலும் எக்கசக்க அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுடன் கூடுதல் சில சிறப்பு வசதிகளும் இந்த ஜெட் எடிசன் நெக்ஸானில் வழங்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஏக்யூஆ திரை வசதிக் கொண்ட ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்டவையே வழங்கப்பட்டுள்ளன.
டாடாவின் இந்த சிறப்பு பதிப்பு கார் மாடல்கள் நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








