ஏப்ரல் 29 அன்று புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது டாடா... உலகளவில் வெளியீடு செய்ய போறாங்களாம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்று புதிய எலெக்ட்ரிக் காரை (Electric Car) உலகளவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் உலகளவில் ஓர் புதுமுக மின்சார காரை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய காரின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள அது ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஏப்ரல் 29 அன்றே புதிய காரை வெளியீடு செய்ய இருக்கின்றது.

நிறுவனம் என்ன மாதிரியான புதிய வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய தகவலை வெளியடவில்லை. வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்றே புதிய மின் வாகனம் குறித்த அனைத்து தகவலும் வெளியிட இருப்பதாக அது தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த செயல்பாடு, "டாடா என்ன மாதிரியான புதிய காரை அறிமுகம் செய்ய இருக்கின்றதோ" என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் தூண்ட செய்திருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் மிக சமீபத்தில் யாரும் எதிர்பார்த்திராத ஓர் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்தது. ஆம், டாடா கர்வ் (Tata Curvv) எலெக்ட்ரிக் காரை பற்றிதான் கூறுகின்றோம். வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இக்காருக்கு முற்றிலும் புதிய தோற்றத்தை டாடா வழங்கியிருந்தது. ஆகையால், பலர் இக்காரின் வருகையை இப்போதில் இருந்தே எதிர்நோக்கிக் காக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மற்றுமொரு புதுமுக எலெக்ட்ரிக் காரை அது வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புதிய மின்சார கார் அல்ட்ராஸ் இவி-யாக இருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு 2020 ஆட்டோ எக்ஸ்போவின்போது தன்னுடைய எதிர்கால வாகனங்கள் சிலவற்றை காட்சிப்படுத்தியது.

அதில் ஒன்று டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) மின்சார கார். தற்போது இக்கார் இந்தியாவில் எரிபொருள் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது ஓர் பிரீமியம் தர வாகனமாகும். இதுமட்டுமின்றி, அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனமாகவும் அது காட்சியளிக்கின்றது. இதுபோன்ற இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக அல்ட்ராஸ் உள்ளது.

ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த நிலையிலேயே இக்காரை மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது டாடா மோட்டார்ஸ். இந்த பணிகளில் மிக தீவிரமாக டாடா மேற்கொண்டு வருகின்றது. எனவேதான் வரும் 29ம் அறிமுகமாக இருக்கும் மின்சார கார் அல்ட்ராஸ் இவி-யாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், இந்த காரின் வெளியீட்டு நிகழ்வாககூட அது இருக்கலாம் என சிலர் தெரிவித்துள்ளனர்.

தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யில் 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதைக் காட்டிலும் கூடுதல் ரேஞ்ஜ் தரும் வாகனமாகவே புதுப்பிக்கப்பட்டு வரும் நெக்ஸான் இவி உருவாகியுள்ளது.

அதிக ரேஞ்ஜ் மட்டுமின்றி கூடுதல் சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாகவும் அது எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அறிமுகமாக நாளாகவும் ஏப்ரல் 29ம் தேதி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியாகிய ஸ்பை படங்கள் புதிய நெக்ஸான் இவியில் பின் பக்க வீலில் டிஸ்க் பிரேக்குகள் இடம் பெற இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று பல சிறப்பு மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடனேயே அக்கார் வர இருக்கின்றது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








