வேற எந்த நிறுவனத்துக்கும் இப்படி ஆயிரக் கணக்குல ஆர்டர் குவியல! டாடா மின்சார காருக்கு கிடைத்த மிக பெரிய ஆர்டர்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம், நெக்ஸான் இவி (Nexon EV) (மேக்ஸ் மற்றும் பிரைம் என இரு விதமான மாடல்களில் இது விற்பனைக்குக் கிடைக்கும்), டிகோர் இவி (Tigor EV), டியாகோ இவி (Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, எக்ஸ்பிரஸ்-டி (XPRES-T) எனும் மாடலையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களை போல் இந்த மாடலை அனைவராலும் வாங்கிக் கொள்ள முடியாது.
இது பிரத்யேகமாக தனியார் நிறுவனங்கள் பொது போக்குவரத்து பயன்பாட்டிற்காக மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக மிகப் பெரிய ஓட்டல்கள், கால் டாக்சி நிறுவனங்கள் போன்ற பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த கார் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், முன்னணி நிறுவனங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது.

இந்த கார் எப்படி தனி நபர் பயணிகள் வாகன பிரிவில் டாப் மூவிங் காராக உள்ளதோ, அதேபோல், வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடிய பயணிகள் வாகன பிரிவில் எக்ஸ்பிரஸ்-டிக்கு மிக மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரே ஒரு நிறுவனம் சுமார் 5 ஆயிரம் யூனிட்டுகள் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் காருக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவரெஸ்ட் எனும் நிறுவனத்திடம் இருந்தே இந்த மிகப் பெரிய ஆர்டர் டாடா மோட்டார்ஸுக்கு கிடைத்திருக்கின்றது. எவரெஸ்ட் என்பது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு வாடகை வாகன சேவை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே தன்னுடைய வாடகை வாகன சேவையில் மின்சார கார்களை புகுத்தும் விதமாக இந்த பிரமாண்ட ஆர்டரை கொடுத்திருக்கின்றது. ஆர்டரின் பேரில் தற்போது முதல் கட்டமாக மும்பை எவரெஸ்டிடம் டாடா மோட்டார்ஸ் 100 யூனிட்டுகள் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் காரை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வு நேற்றைய (டிசம்பர் 14) தினமே அரங்கேறியது. அடுத்து வரும் நாட்களிலும் இதேபோல் பல்கான அளவில் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்கள் எவரெஸ்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றது. இதற்கான பணியில் தற்போது டாடா மோட்டார்ஸ் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. எவெரெஸ்ட் நிறுவனம் மட்டுமே இதுபோன்று டாடாவின் இந்த எக்பிரஸ்-டி எலெக்ட்ரிக் காரை பல்க்காக வாங்கவில்லை. இன்னும் சில நிறுவனங்களும் இந்த காரை மிக மிக அதிக எண்ணிக்கையில் வாங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில் சமீபத்தில் எவேரா (Evera) எனும் நிறுவனம் 2 ஆயிரம் எக்ஸ்பிரஸ் டி இவி எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டர்களை வழங்கியது. ஏற்கனவே டாடாவின் எலெக்ட்ரிக் கார்கள் பல இந்த நிறுவனத்தின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்ற வேலையில் கூடுதலாக புதிய எலெக்ட்ரிக் கார்களையும் இணைக்கும் விதமாக இந்த நடவடிக்கையில் அது களமிறங்கியது. இதுமட்டுமில்லைங்க மிக சமீபத்தில் ப்ளூஸ்மார்ட் எலெக்ட்ரிக் மொபிலிட்டி எனும் நிறுவனத்திடம் இருந்தும் மிகப் பெரிய ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றது.

இந்த நிறுவனம் 10 ஆயிரம் எக்பிரஸ் டி இவி எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டரை வழங்கியது. இந்த பல்க் ஆர்டர் நிகழ்வு நடப்பாண்டு ஜூன் மாதத்திலேயே அரங்கேறியது. ஆகையால், நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் காருக்கு தனியார் மற்றும் கார்பரேட் நிறுவனங்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது மிக தெளிவாகத் தெரிகின்றது. டாடா மோட்டார்ஸுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த சூப்பரான வரவேற்பிற்கு போட்டி கார் மாடல் இல்லாததே முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆமாங்க, இந்த நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியாளானாக விளங்கிக் கொண்டிருக்கும் மாருதி சுஸுகி இன்னும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரப்படாத சூழலே தென்படுகின்றது. அதேவேலையில், மஹிந்திரா நிறுவனம் கால் டாக்சி பிரிவிற்கு என்றே இ-வெரிட்டோ எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த கார் மாடலைக் காட்டிலும் டாடாவின் எக்ஸ்பிரஸ்-டி இவிக்கு மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கு மட்டுமல்லைங்க டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கும் நல்ல வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் அவுரங்காபாத் மற்றும் கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும் தங்களின் 'மிஷன் கிரீன் மொபிலிட்டி' திட்டத்திற்காக டாடா எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கு மிகப் பெரிய ஆர்டரை வழங்கின என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடாவின் எக்ஸ்பிரஸ்-டி ஓர் எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
எக்ஸ்பிரஸ் - டிஎக்ஸ்எம் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் - டிஎக்ஸ்டி பிளஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரூ. 13.04 லட்சம் மற்றும் ரூ. 13.54 லட்சம் எனும் விலையிலே மின்சார கார் விற்கப்பட்டு வருகின்றது. ஒரு முரை முழுமையாக சார்க் செய்தால் இந்த காரில் 165 கிமீ தொடங்கி 213 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுமாதிரியான சிறப்பான ரேஞ்ஜை வழங்குகின்ற காரணத்தினாலேயே கால் டாக்சி நிறுவனங்களிடம் இந்த எலெக்ட்ரிக் காருக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








