5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

டாடா நெக்ஸான் கார் தனது போட்டியாளர்களை எல்லாம் கலங்கடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இந்த கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியுள்ளது. இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா நெக்ஸான் கார், இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்தமாக 15,085 நெக்ஸான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் டாடா நெக்ஸான் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நெக்ஸான் கார்களை விற்பனை செய்தது கிடையாது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

டாடா நெக்ஸான் காரின் ஐசி இன்ஜின் மாடல்களில், 1.2 லிட்டர் Revotron டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் Revotorq டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), ஹோண்டா டபிள்யூஆர்-வி (Honda WR-V) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுடன் டாடா நெக்ஸான் போட்டியிட்டு வருகிறது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

அத்துடன் கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகிய கார்களுக்கும் விற்பனையில் டாடா நெக்ஸான் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது என்பது நம்மில் அனைவருக்கும் கிட்டத்தட்ட தெரியும்.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்றால், அது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் (Tata Nexon EV). டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) என்ற பெயரில், இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்து வந்த நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் பல்வேறு அப்டேட்களை செய்து, மேம்படுத்தப்பட்ட புதிய மாடலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உள்ளது. இதற்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் மிகவும் முக்கியமான காரணம். இதுதவிர டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரும் (Tata Tigor EV) இதற்கான மற்றொரு காரணமாக உள்ளது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

இந்த ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ளும் வகையில், வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. முன்னதாக எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெட் எடிசன் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் நல்லா வேலை செய்யிது... போட்டியாளர்களை கலங்கடித்த டாடா நெக்ஸான் கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார்களில் ஜெட் எடிசன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பண்டிகை காலத்தில் இந்த கார்களின் விற்பனை எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதற்கான வாய்ப்புகளும் மிகவும் பிரகாசமாகவே உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 6, 2022, 7:15 [IST]
English summary
Tata nexon compact suv records highest ever monthly sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+