டாடா நெக்ஸான் மின்சார காரை பயன்படுத்தும் இளைஞர் மாசம் எவ்ளோ கரண்ட் பில் கட்டுறாரு தெரியுமா? இதோ முழு விபரம்!
டாடா நெக்ஸான் இவி காரை பயன்படுத்தும் இளைஞர் ஒருவர் அவருக்கு எவ்வளவு கரண்ட் பில் வருகிறது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.
இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார காராக நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த கார் இந்திய சந்தையில் பெட்ரோல் மோட்டார் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வெர்ஷனே நாட்டில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாகவே மின் வாகன பிரியர்களையும் ஈர்க்கும் பொருட்டு நெக்ஸான் இவி வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதில் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய மாடலாக நெக்ஸான் இவி மேக்ஸ் இருக்கின்றது. இந்த மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே டாடா விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையிலேயே ஓர் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டாளர் அவருடைய வீட்டின் கரண்ட் பில்லையும், நெக்ஸான் இவி-யை பயன்படுத்த அவருக்கு ஆகும் செலவையும் வெளியிட்டுள்ளார். வீடியோவாக இதுகுறித்த தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார். இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
மாதம் ஒன்றிற்கு தன்னுடைய வீட்டு மின்சார செலவு மற்றும் காரை சார்ஜ் செய்யும் செலவு ஆகிய இரண்டிற்கும் சேர்த்து அவர் ரூ. 2,900 கரண்ட் பில் கட்டுவதாக தெரிவித்திருக்கின்றார். பெரும்பாலான வீட்டுதாரர்கள் இதைவிட அதிக கட்டணத்தை மின்சாரத்திற்காக செலுத்தி வரும்நிலையில் இளைஞர் மின்சாரையும் காரையும் பயன்படுத்திக் கொண்டு, வீட்டுக்கு தேவையான மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு இவ்வளவு குறைவான கட்டணத்தைச் செலுத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

வாங்கிய நாள் முதலில் இருந்து இளைஞர் தன்னுடைய வீட்டில் வைத்தே மின்சார காரை இளைஞர் சார்ஜ் செய்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் அவர் கூறிய அளவில் மட்டுமே கட்டணம் வருமாம். இதைத் தாண்டி அதிகளவில் தனக்கு இபி பில் வந்ததில்லை என கூறியுள்ளார். இத்தனைக்கும் அவரது வீட்டில் ஃபேன், லைட், ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் என அனைத்து மின்சாதன பொருட்களும் இருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.

இருப்பினும், மிகக் குறைவான கட்டண அவருக்கு வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, அவருக்கு வந்திருக்கும் பில்லை வைத்து தோராயமாகக் கணக்கிட்டதன் வாயிலாக ஒரு கிமீ நெக்ஸான் இவி காரை இயக்க ஒரு ரூபாய் மட்டுமே செலவாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆக அவர் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவான செலவில் டாடா நெக்ஸான் இவி காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த மாதிரியான காரணங்களுக்காகவே இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டாடாவின் இந்த நெக்ஸான் இவி தயாரிப்பிற்கு மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் குறைவான விலையில் டிகோர் இவி எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் நெக்ஸான் இவியே விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

காரணம் அதிக சிறப்பு வசதிகள், அதிக பாதுகாப்பு திறன் மற்றும் கவர்ச்சியான தோற்றத்துடன் அக்கார் விற்பனைக்குக் கொண்டிருப்பதே ஆகும். அதேவேலையில், டாடா டிகோர் இவியிலும் அதிக பயன்பாட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் மத்தியில் இக்காரைக் காட்டிலும் நெக்ஸான் இவி-க்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

டாடா நிறுவனம் நெக்ஸான் இவி-யை தற்போது 'நெக்ஸான் இவி பிரைம்' (Tata Nexon EV Prime) எனும் பெயரில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது, எக்ஸ்எம், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ், டார்க் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் டார்க் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ஆகிய ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், நெக்ஸான் இவி மேக்ஸை - எக்ஸ்இசட் பிளஸ் (3.3 கிலோவாட் பேட்டரி பேக்), எக்ஸ்இசட் பிளஸ் (7.2 கிலோவாட் பேட்டரி பேக்), எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (3.3 கிலோவாட் பேட்டரி பேக்) மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (7.2 கிலோவாட் பேட்டரி பேக்) ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

நெக்ஸான் இவி மேக்ஸ் ஓர் முழுமையான சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜை தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 40.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறந்த இயக்கத்தை வழங்கும் விதமாக 105 kW திறன் கொண்ட மின் மோட்டார் நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 143 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதைவிட சற்று குறைவான திறன் கொண்டபேட்டரி பேக்கே நெக்ஸான் இவி பிரைமில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக இந்த வாகனத்தில் 30.2 kWh லித்தியம் அயன்-பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக்காகும். நெக்ஸான் இவி பிரைம் ரூ. 14.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications








