எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

டாடா நெக்ஸான் காரை 2 ஆண்டுகளாக ஓட்டியவருக்கு திடீரென ஏற்பட்ட பேட்டரி பிரச்சனையால் ரூ7 லட்சம் வரை செலவு வந்தது. ஆனால் அவர் ஒரு பைசா கூட செலவு பண்ணாம அதைச் சரி பண்ணிட்டார் எப்படின்னு முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ 7 லட்சம் செலவாகுமா ? என்னங்க சொல்றீங்க ?

இன்று உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் முழுவதுமாக எலெக்டரிக்கில் இயங்கும் வாகனத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஏறிக்கொண்டே வரும் பெட்ரோல் விலை மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகிய விஷயங்கள் இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் போட்டால் மட்டும் போதும் ஜாலியாக பயணிக்கலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி சொல்கிறோம். குறிப்பிட்ட காலம் அல்லது குறிப்பிட்ட அளவு பயணம் செய்த பின் வாகனங்களில் உள்ள பேட்டரியின் திறன் குறையத் துவங்கிவிடும். நம் செல்போன்னில் சிலருக்கு நாளாக நாளாக பேட்டரியின் திறன் குறையுமே அப்படி காரின் பேட்டரியின் திறனும் குறையும். இதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரிக்கான வாரண்டிகளை வழங்குகிறது.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் இவி காரை வாங்கிய ஒருவருக்கு 68 ஆயிரம் கி.மீ பயணம் செய்தபோதே பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூகவலைத்தளங்களில் அவர் செய்த பதிவு பலரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு டாடா நெக்ஸான் இவி காரை வாங்கியுள்ளார். தற்போது வரை இவருக்கு 68 ஆயிரம் கி.மீ ஓடியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

இந்நிலையில் இவர் காரில் திடீரென ஒரு பிரச்சனை வந்துள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தாலும் பழைய மாதிரியாக ரேஞ்ச் கிடைக்கவில்லை. அதே போல வாகனத்தில் பேட்டரி 15 சதவீதத்திற்குள் குறைவாக இருந்தால் சார் சாலையில் ஓடும் போது திணறியுள்ளது. இதையடுத்து அவர் இந்த பிரச்சனையை சரி செய்ய டாடா நிறுவனத்தை அணுகியுள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

பொதுவாக டாடா நிறுவனம் தனது நெக்ஸான் இவி காருக்கான பேட்டரிக்கு 1.6 லட்சம் கி.மீ பயணம் அல்லது 8 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கியுள்ளது. தற்போது இவருக்கு பேட்டரிக்கான வாரண்டி இருந்ததால் இவரது காரின் பேட்டரியை மாற்றி புதிதாக பேட்டரியை போட்டுக் கொடுத்துள்ளனர். ஒருவேலை இவரிடம் வாரண்டி இல்லை என்றால் இவர் இந்த பேட்டரியை தனது சொந்த பணத்தைச் செலவு செய்தி மாற்றியிருக்க வேண்டும்.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

அப்படி மாற்றியிருந்தால் அதற்கு ரூ7 லட்சம் வரை செலவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட தொகையை டாடா நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் இன்று நாம் சிந்தித்துப் பார்த்தால் அது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அப்படி என்றால் பேட்டரி வாகனம் வாங்கினாலும் சில

ஆண்டுகளில் இதற்கு பேட்டரியை புதுப்பிக்க மீண்டும் பல லட்சம் செலவு செய்ய வேண்டியது வரும்.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

இந்தியாவில் பேட்டரி என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனத்தைப் பொருத்தவரை பேட்டரியில் திறனால் மட்டுமே இயங்கும். பேட்டரி தயாரிப்புக்கு அரசு மானியங்கள் வழங்கும் நிலையில் தற்போது பேட்டரிகள் இந்தியாவில் தயாரிக்க ஒரு கிலோ வாட் பேட்டரிக்கு ரூ15-20 ஆயிரம் வரை ஆகிறது. மார்கெட்டில் ஒரு கிலோ வாட் பேட்டரி ரூ25 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

டாடா நெக்ஸான் இவி காரில் 30.3 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அப்படி என்றால் அந்த பேட்டரியை தயாரிக்கவே ரூ6.06 லட்சம் செலவாகும். இதற்கு இதர செலவுகள் மற்றும் லாபம் சேர்க்கும் போது ரூ7 லட்சம் வந்துவிடும். இது மட்டுமல்ல எலெக்டரிக் வாகனங்களுக்கான பேட்டரி ஒரே பேட்டரியாக வருகிறது. இது பேட்டரி ரிப்பேர் ஆனால் அதைச் சரி செய்வது சிரமமாகிறது.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

பேட்டரிகள் என்பது செல்களால் ஆன கூட்டமைப்பு தான். இது குழப்பமாகவும், சிக்கலாகவும் இருப்பதால் அதை ரிப்பேர் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. ஆனால் பேட்டரிகள் பெரும்பாலும் ரிப்பேர் ஆவதில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் பேட்டரிகள் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதற்குத் தட்ப வெப்ப நிலை கூட சிலநேரங்களில் காரணமாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

ஆனால் இப்படியாக பேட்டரிகள் ரிப்பேர் ஆகும் போது அதன் திறன் குறையும். நாம் முன்பே சொன்னது போல பேட்டரிகள் செல்களால் ஆன கூட்டமைப்பு தான் என்பதால் அதில் ஒரு செல் மட்டும் செயல்படாமல் போனால் அதற்குத் தகுந்தார் போலத் திறன் குறையும் அதிகமான செல்கள் செயல்படாமல் போகும் போது ஒட்டு மொத்த பேட்டரியின் திறனில் பெரிய மாற்றம் ஏற்படும்.

எலெக்ட்ரிக் வாகனத்தில் பேட்டரியை மாற்ற ரூ7 லட்சம் செலவாகுமா? என்னங்க சொல்றீங்க?

இந்த பிரச்சனையைச் சமாளிக்க சில வல்லுநர்கள் வழக்கமாக வாகனங்களுக்குத் தேவையான செல்களை விட அதிக செல்கள் கொண்ட பேட்டரியை வாகனத்தில் பொருத்த வேண்டும் இதனால் பேட்டரியில் சில செல்கள் செயல்படாமல் போனாலும் திறன் பெரிய அளவில் பாதிக்காது எனச் சொல்கிறார்கள். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் பெரும்பாலும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான கி.மீ பயணிக்கலாம் என்பதால் இது பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. கம்பஷன் இன்ஜின் வாகனமே அவ்வளவு கி.மீ பயணத்திற்குப் பிறகு திறன் குறைந்து விடும். அத்துடன் இதை ஒப்பிட்டால் சரியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Tata Nexon EV battery may cost rupees 7 lakh in India know real reason
Story first published: Wednesday, July 13, 2022, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X