சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

டாடா மோட்டார்ஸின் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் இவி மேக்ஸ் சென்னை-டூ-பாண்டிச்சேரி போய்ட்டு ரிட்டர்னே வரலாம் என புதிய ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல நெக்ஸான் இவி காரை விரைவில் 'நெக்ஸான் இவி மேக்ஸ்' (Nexon EV MAX) எனும் புதிய பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் விற்பனைக்கான அறிமுகம் நாளை மறுநாள் (மே 11) அரங்கேற இருக்கின்றது. இந்த நிலையில் மின்சார காரின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக நிறுவனம் புதிய டீசர் வீடியோக்களையும், படங்களையும் டாடா வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

முன்னதாக காரில் இடம் பெற இருக்கும் சிறப்பு வசதிகள் குறித்த டீசர் வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரேஞ்ஜ் திறன் பற்றிய விபரத்தையும் நிறுவனம் வெளயிட்டிருக்கின்றது. புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் நிச்சயம் 300 கி.மீட்டருக்கும்., அதிகமான பயண தூரத்தை ஒற்றை முழு சார்ஜில் வழங்கும் டாடா தெரிவித்துள்ளது.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி மாடலில் 30 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 312 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரும் என அராய் (ARAI) சான்று வழங்கியிருக்கின்றது. ஆனால், நிஜ வாழ்க்கையில் டிராஃபிக், அதிக வேகத்தில் செல்வது ஆகியவற்றின் காரணத்தினால் 200கிமீ முதல் 250 கிமீ ரேஞ்ஜ் திறன் வரை மட்டுமே அது வழங்குகின்றது.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

இந்த ரியல் லைஃப் ரேஞ்ஜ் திறனிலேயே 300க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடியதாக நெக்ஸான் இவி மேக்ஸ் தயாராகி இருக்கின்றது. அந்தவகையில், சென்னையில் இருந்து பாண்டிச்சேரி அசால்டாக போய்ட்டு ரிட்டர்ன் சென்னைக்கே மீண்டும் வந்துவிடலாம். அதுவும், மறுபடியும் எங்கும் சார்ஜ் செய்யாமலே வந்துவிடலாம் என டாடா தெரிவித்துள்ளது.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே புதிய வீடியோவை டாடா மோட்டார்ஸ் தற்போது வெளியிட்டிருக்கின்றது. அந்த வீடியோவில் இன்னும் சில முக்கிய நகரங்களையும், அதற்கு அருகில் இருக்கும் நகரங்களுடன் இணைந்து வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. மும்பை-டூ-புனே, டெல்லி-டூ-குருக்சேத்ரா, பெங்களூரு-டூ-மைசூரு ஆகிய இடங்களை ஒற்றை முழுமையான சார்ஜில் ரிடர்னிங்குடன் கன்னெக்ட் செய்யும்.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

40kWh பேட்டரி பேக்கே இந்த உச்சபட்ச ரேஞ்ஜிற்காக புதிய நெக்ஸான் இவி மேக்ஸில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேட்டரி பேக் அதிகபட்சமாக 400 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. இத்துடன், 136 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரும் புதிய நெக்ஸான் இவி மேக்ஸில் எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

நெக்ஸான் இவி மேக்ஸ் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக மட்டுமே தயாராகவில்லை. இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரிலும் மாற்றங்களுடன் வர இருக்கின்றது. அந்த வகையில், புதிய பேட்ஜ், புதிய நீல நிற அணிகலன்கள், புதிய ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. அனைத்து மாற்றங்களும் புதிய நெக்ஸான் இவி மேக்ஸிற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

இதுதவிர ஸ்டைலான மற்றும் கவர்ச்சிகரமான 5 ஸ்போக் அலாய் வீல்கள், பின் பக்க வீலில் டிரம் பிரேக்குகளுக்கு பதிலாக டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. அந்தவகையில், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், லெதர் இருக்கைகள், ஏர் ஃப்யூரிஃபையர் வசதி மற்றும் இஎஸ்பி உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

சென்னை-டூ-பாண்டி போய்ட்டு ரிட்டர்னே வரலாம்... புதிய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் விபரம் வெளியீடு!

இக்காரில் மேம்படுத்தப்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கூடுதல் ரேஞ்ஜை வழங்க உதவும். இந்த அம்சங்கள் அனைத்தும் புதிய நெக்ஸான் இவி மேக்ஸிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாக நெக்ஸான் இருக்கின்றது.

காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவின் மிக சிறந்த விற்பனையைப் பெறும் கார் மாடலாக நெக்ஸான் இருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 13,471 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றது. இது 2021 ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் 94 சதவீதம் அதிகம் விற்பனை ஆகும். இத்தகைய மிக சிறப்பான வளர்ச்சியின் காரணத்தினால் டாடா மோட்டார்ஸ் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் சென்ற ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தது.

More from DriveSpark

Article Published On: Monday, May 9, 2022, 14:25 [IST]
English summary
Tata nexon ev max can travel with single charge chennai to pondy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+