கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்! நெக்ஸான் இவி-யின் போட்டியாளன்!

எலெக்ட்ரிக் வெர்ஷனில் உருவாகியிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) கார் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. டாடா நெக்ஸானுக்கு போட்டியளிக்கும் வகையில் தயாராகி இருக்கும் இக்கார் குறித்த முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

சமீப காலமாக இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஆகையால், நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. ஏற்கனவே, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், எம்ஜி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி உள்ளிட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை நாட்டில் தொடங்கிவிட்டன.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

இவற்றின் வரிசையில் மிக விரைவில் மஹிந்திரா நிறுவனமும் இணைய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது புதிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. மின்சார வெர்ஷனில் உருவாகியிருக்கும் எக்ஸ்யூவி 300 காரின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதன் வாயிலாகவே நிறுவனம் மிக விரைவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையை நாட்டில் தொடங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

அதாவது, நிறுவனம் எக்ஸ்யூவி300 காரை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்டு தற்போது தீவிர பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு சோதனையோட்டத்தில் உட்படுத்தியபோதே எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் ஸ்பை செய்யப்பட்டிருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா எலெக்ட்ரிக் எனும் துணை பிராண்டின் கீழ் ஏற்கனவே சில மின்சார வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. இ-வெரிட்டோ (நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் ஒரே எலெக்ட்ரிக் கார் இதுவாகும்), இ-சூப்ரோ, ட்ரியோ மற்றும் ட்ரியோ ஜோர் ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

இவை அனைத்தும் வர்த்தக பிரிவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது, இ-வெரிட்டோ மற்றும் ட்ரியோ ஆகிய இரண்டும் வாடகை மற்றும் டாக்சி பிரிவிற்காகவும், இ-சூப்ரோ மற்றும் ட்ரியோ ஜோர் ஆகியவை சரக்குகளை கையாளும் வகையிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

இவற்றைப் போன்று இல்லாமல் தனி நபர் பயன்படுத்தும் வகையிலேயே புதிய எக்ஸ்யூவி 300 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த கார் இ-எக்ஸ்யூவி 300 (eXUV300) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இந்த காரை ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனம் காட்சிப்படுத்திவிட்டது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

Image Courtesy: B Vinubalan

இந்த நிலையிலேயே இக்காரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றது, மஹிந்திரா. அந்தவகையில், உற்பத்திக்கு தயாராக இருக்கும் ஓர் மாடலின் முன் மாதிரி மாடலே தற்போது சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

இந்த காரை வரும் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 40kWh பேட்டரி பேக் மற்றும் 130 பிஎச்பி திறன் கொண்ட மின் மோட்டார் ஆகிய திறன்களுடன் இக்கார் விற்பனைக்கு வரும் கூறப்படுகின்றது. மேலும், ஒற்றை சார்ஜில் இ-எக்ஸ்யூவி 300 எலெக்ட்ரிக் கார் 300 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. அதேநேரத்தில், இக்காருக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் நிலவுவதனால் மிக விரைவில் இக்காரின் வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை மஹிந்திரா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

இதன் வருகை தற்போது மின்சார கார் பிரிவில் சக்கை போடுக் போட்டுக் கொண்டிருக்கும் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் இவி மின்சார காருக்கு போட்டியாக அமையும். முன்னதாக இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக விற்கப்பட்டு வந்த இக்கார் டிகோர் இவி வருகையால் சற்றே காஸ்ட்லியான மின்சார காராக மாறியிருக்கின்றது. இருப்பினும் இதன் விற்பனை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

தற்போது இந்தியாவில் ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமான விலையில் டாடா நெக்ஸான் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. மாதம் ஒன்றிற்கு 1,500 முதல் 2,500 யூனிட் வரை இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் நெக்ஸான் இவி-க்கு 3 முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பு நிலவுகின்றது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

இந்தளவிற்கு டிமாண்ட் நிலவி வருகின்ற காரணத்தினாலும், இக்காரின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்திலும் டாடா மோட்டார்ஸ் இக்காரை விரைவில் சில அப்டேட்டுகளுடன் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. அதிக ரேஞ்ஜ், கூடுதல் சிறப்பம்சங்கள் என பல்வேறு புதிப்பத்தல்களுடன் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவிற்காக இ-எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரை மட்டுமல்ல மற்றுமொரு மின்சார காரையும் தயாரித்து வருகின்றது. புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாகா சந்தையை விட்டு வெளியேற்றப்பட்ட கேயூவி100 காரையே நிறுவனம் இ-கேயூவி100 என்ற பெயரில் மின்சார காராக விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

கேமிராவின் கண்களில் சிக்கிய மஹிந்திரா எக்ஸ்யூ300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்... டாடா நெக்ஸானுக்கு செம்மையான போட்டி காத்திருக்கு!

ஆகையால், மிக விரைவில் இக்காரின் அறிமுகம் பற்றிய தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை 130 கிமீ ரேஞ்ஜ் முதல் 150 கிமீ ரேஞ்ஜ் வரையிலான திறனில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நகர்புற மற்றும் தினசரி பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையும் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போவிலேயே நிறுவனம் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 1, 2022, 18:48 [IST]
English summary
Tata nexon ev rival mahindra e xuv 300 spied while testing
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+