முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் உருவெடுத்துள்ளது. கடந்த 2021 காலாண்டர் ஆண்டில் 1,08,577 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு தயாரிப்பாக நெக்ஸான் இருந்து வருகிறது.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

டாடா நெக்ஸான் கார் இந்திய சந்தையில் கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின் டாடா நெக்ஸான் காரின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த சூழலில் கடந்த 2021ம் ஆண்டு டாடா நெக்ஸான் காரின் வருடாந்திர விற்பனை முதல் முறையாக 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இதற்கு முன்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே வருடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நெக்ஸான் கார்களை விற்பனை செய்தது கிடையாது. இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,899 நெக்ஸான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் டாடா நெக்ஸான் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும்.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இதற்கு முன்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நெக்ஸான் கார்களை விற்பனை செய்தது கிடையாது. ஆக மொத்தத்தில் டாடா நெக்ஸான் கார் தனது அதிகபட்ச வருடாந்திர மற்றும் மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தி விட்டது. டாடா நெக்ஸான் காரின் இந்த சிறப்பான விற்பனைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

டாடா நெக்ஸான் காரின் டிசைன், சிறப்பான இன்ஜின் தேர்வுகள், சவாலான விலை நிர்ணயம் என இதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட டாடா நெக்ஸான் கார் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்றால், அது பாதுகாப்புதான்.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

ஆம், இந்தியாவில் விற்பனையில் செய்யப்படும் பாதுகாப்பான கார்களில் டாடா நெக்ஸான் மிக முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முதல் முறையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் இந்திய கார் என்றால், அது டாடா நெக்ஸான்தான்.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

டாடா நெக்ஸான் காருக்கு பிறகுதான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை ஸ்கோர் செய்தன. டாடா நெக்ஸான் கார் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பலமுறை காப்பாற்றியுள்ளது.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் நீங்கள் பலமுறை வாசித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இந்தியாவில் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு விஷயத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதால்தான், டாடா நெக்ஸான் காரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் உயரும் என எதிர்பார்க்கலாம். டாடா நெக்ஸான் கார் தற்போது வழக்கமான ஐசி இன்ஜின் தேர்வில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கிடைத்து வருகிறது. ஐசி இன்ஜின் மாடலை போலவே, டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் விற்பனையும் தூள் கிளப்பி கொண்டுள்ளது.

முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எது என கேட்டால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். எம்ஜி இஸட்எஸ், ஹூண்டாய் கோனா ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விட இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் குறைவான விலையில் கிடைப்பது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata nexon registers highest ever monthly yearly sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X