வேற லெவல் பில்டு குவாலிட்டி! டாடா பிளாக்பேர்டு எஸ்யூவியை பார்த்து தலை சுற்றி நிற்கும் பேட்டியாளர்கள்!

டாடா நிறுவனம் வரும் 2023ம் ஆண்டில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் முற்றிலும் புதிதாக பிளாக்பேர்டு எஸ்யூவி என்ற காரை அறிமுகம் செய்யவுள்ளது. அதிக பாதுகாப்பு வசதி, சொகுசு வசதி என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் வெளியாகவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் ஏற்கனவே நெக்ஸான் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வெளியான செய்திக்குப் பின்பு மக்கள் பலர் இந்த காரை நம்பத் துவங்கிவிட்டனர். இந்த காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனை கூட டாடா நிறுவனம் வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளது. பில்டு குவாலிட்டி சிறப்பாக இருந்தாலே மக்களின் நன்மதிப்பைப் பெற்று விட முடியும் என்பதற்கு இந்த கார் உதாரணம்.

வேற லெவல் பில்டு குவாலிட்டி! டாடா பிளாக்பேர்டு எஸ்யூவியை பார்த்து தலை சுற்றி நிற்கும் பேட்டியாளர்கள்!

நெக்ஸான் கார் வெளியாகிப் பல ஆண்டுகள் ஆன நிலையில் அந்த செக்மெண்டில் தன் நிலையைத் தக்க வைத்துக்கொள்ள டாடா நிறுவனம் அடுத்தாக ஒரு புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த காருக்கு பிளாக்பேர்டு என பெயர் வைத்துள்ளது. இந்த கார் நெக்ஸான் காரை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹாரியரை விட குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் டாடா நெக்ஸான் கார் உருவாக்கப்படும் அதே எக்ஸ்1 பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது. இதன் வெளிப்புறத் தோற்றம் கூபே வடிவில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு டாடா நெக்ஸான் காரை விட நீளமாகவும், பெரியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட், ஸ்லீக்கான முகப்பு பக்க கிரில் பகுதி, உயரமான பானட், ஆகியன காருக்கு ஒரு ரக்கட் ஃபீலை கொடுக்கும். இது மட்டுமல்லாமல் இந்த காரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்கிறது.காரை சுற்றி பிளாஸ்டிக் பாடி கிளாடிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த டிசைன் மொழிக்கும் கூடுதல் அழகு சேர்க்கிறது.

இந்த பிளாக்பேர்டு எஸ்யூவி காரின் உட்புறத்தைப் பொருத்தவரை அதிக தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் அதிக இட வசதியுடன் கொண்ட கேபின் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வழக்கம்போல ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். இது போக மற்ற அம்சங்களாக ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், முகப்பு பக்க வென்டிலேட்ட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஆட்டோமெட்டிக் வைப்பர்கள், ரியர் டிஃபாக்கர், புஷ் பட்டன் ஸ்டார்ட், மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது.

இந்த டாடா பிளாக்பேர்டு எஸ்யூவி காரை பொருத்தவரை மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகவுள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை பொருத்தப்படவிருக்கின்றனர். இந்த இன்ஜின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. ஆனால் இது எல்லாம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் தான். இதன் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எல்லாம் இந்த கார் அறிமுகமாகும் நேரத்தில் வெளியிடப்படும்.

இந்த கார் மார்கெட்டில் விற்பனைக்கு வந்தால் ஏற்கனவே மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா,டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் எம்ஜி அஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் விலையைப் பொருத்தவரை காலை ரூ10-12 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மட்டும் மார்கெட்டிற்கு வந்துவிட்டது என்றால் பல கார்களின் விற்பனை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தகாரின் சேஃப்டிக்காக பலர் இதை விரும்பி வாங்குவார்கள்

Most Read Articles

English summary
Tata plans to launch coupe style mid size SUV blackbird on 2023
Story first published: Wednesday, November 30, 2022, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X