சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

மிகவும் விலை குறைவான மற்றும் பாதுகாப்பான டாடா காரில் சூப்பரான புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளதாலும், விலை மிகவும் குறைவு என்பதாலும், இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான காராக தற்போது டாடா பன்ச் மாறியுள்ளது.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் டாடா பன்ச் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக பன்ச் காரின் கேமோ எடிசனை (Camo Edition) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

டாடா பன்ச் கேமோ எடிசனின் டீசர் ஏற்கனவே வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இன்று (செப்டம்பர் 22) இந்த புதிய மாடல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டாடா பன்ச் கேமோ எடிசன் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களுடன் (பியானோ பிளாக் மற்றும் பிரிஸ்டன் ஒயிட்) புதிய ஃபோலியேஜ் க்ரீன் (Foliage Green) கலர் முக்கியமான அம்சமாக உள்ளது. இதுதவிர சில்வர் ஸ்கிட் பிளேட்கள், முன் பக்க ஃபெண்டரில் கேமோ பேட்ஜ் மற்றும் 16 இன்ச் 'Charcoal' அலாய் வீல்களும் குறிப்பிடத்தக்கவை.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

மேலும் எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள் ஆகிய அம்சங்களும் டாடா பன்ச் கேமோ எடிசனில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புதிய மாடலில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உட்புறத்தை பொறுத்தவரையில் மிலிட்டரி க்ரீன் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

வசதிகளை பொறுத்தவரையில் டாடா பன்ச் கேமோ எடிசனில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஆகிய அம்சங்கள் டாடா பன்ச் கேமோ எடிசனில் கொடுக்கப்பட்டுள்ளன.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

செயல்திறனை பொறுத்தவரையில் டாடா பன்ச் கேமோ எடிசனில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இந்த இன்ஜினை தேர்வு செய்ய முடியும்.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

டாடா பன்ச் கேமோ எடிசனின் ஆரம்ப விலை 6.85 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.63 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக தனது கார்களில் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

இந்த வரிசையில் தற்போது பன்ச் காரின் கேமோ எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இந்த கேமோ எடிசன் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் காரின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாக உள்ள நிலையில், இந்த கேமோ எடிசன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக கருதப்படுகிறது.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

பண்டிகை காலத்தில் நிறைய பேர் புதிய கார்களை வாங்குவதற்கு திட்டமிடுவார்கள். எனவே அதனை மனதில் வைத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் கேமோ எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதை தொடர்ந்து பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொன்ன மாதிரியே லான்ச் பண்ணீட்டாங்க... மிகவும் விலை குறைவான இந்த டாடா காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க

ஆனால் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சற்று காலம் ஆகலாம். அதற்கு முன்னதாக டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஆகிய 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata punch camo edition launched in india price features engine
Story first published: Thursday, September 22, 2022, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X