வெப்பத்தை தவிர்க்க உபி-காரர் செய்த விநோத செயல்... வீட்டுல பொருத்த வேண்டிய ஏசி காருல பொருத்தியிருக்காங்க!
வெப்பத்தை தவிர்க்க யுட்யூபர் ஒருவர் தனது காரின் பின் பக்கத்தில் விண்டோ ஏசி-யை பொருத்தியிருக்கின்றார். யுட்யூபரின் இந்த விநோத செயல்குறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடல்களில் பஞ்ச் (Punch)-ம் ஒன்று. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இந்த காரின் பின் பகுதியிலேயே யுட்யூபர் ஒருவர் விண்டோ ஏசி (AC)-யைப் பொருத்தியிருக்கின்றார். இந்தியர்கள் மத்தியில் வாகன மாடிஃபிகேஷன் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களை தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், கடந்த காலங்களில் வாகனங்களில் மினி பாரை உருவாக்குவது, டாய்லெட் வசதியை நிறுவுவது மற்றும் காரையே மினி படுக்கை அறைக் கொண்டதாக மாற்றுவது என வாகன உரிமைதாரர்கள் மாற்றியிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே முற்றிலும் மாறுபட்ட செயலாக யுட்யூபர் ஒருவர் அவரது காரில் விண்டோ ஏசி-யை பொருத்தியிருக்கின்றார். தன்னுடைய பகுதியில் நிலவிக் கொண்டிருக்கும் கடுமையான வெப்பத்தைச் சமாளிக்கும் பொருட்டே அவர் விண்டோ ஏசி-யைப் காரில் பொருத்தியுள்ளார். கார் கேபினை வெகு விரைவில் குளிர்ச்சியானதாக மாற்றும் பொருட்டே இந்த செயலை அவர் செய்திருக்கின்றார்.

இதுகுறித்த முழு விபரங்களையும் அந்த யுட்யூபர் அவரது 'ஃபன் வித் சயின்ஸ்' எனும் யுட்யூப் சேனலில் வெளியிட்டிருக்கின்றார். ஆனால், காரில் எவ்வாறு ஏசி பொருத்தப்பட்டது என்பது பற்றிய வீடியோவை அவர் வெளியிடவில்லை. ஏசியின் இயக்கத்திற்காக இன்வெர்டர் மற்றும் பேட்டரிகள் ஆகியவற்றை தனி தனியாக காரில் பொருத்தப்பட்டிருக்கின்றன.
வீடுகளில் பயன்படுத்தப்படும் வழக்கமான இன்வெர்டர் மற்றும் பேட்டரியே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோ ஏசிக்கு சற்று அதிக பவர் தேவைப்படும் என்கிற காரணத்தினாலேயே கூடுதல் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் காரின் பின் பகுதியிலேயே நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அதாவது, விண்டோ ஏசி, பேட்டரி மற்றும் இன்வெர்டர் என அனைத்தும் பின் பக்கத்திலேயே பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஏசி காரில் எந்த அளவிற்கு அதிக வேகத்தில் செயல்படுகின்றது என்பதையும் யுட்யூபர் வீடியோவில் வெளிக்காட்டியிருக்கின்றார். இது காரில் வழங்கப்பட்டிருக்கும் ஏசி-யைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் காரின் கேபினை குளிர்ச்சியாக்குவதை வெளிக்காட்டியிருக்கின்றார்.

வழக்கமாக காருக்குள் வழங்கப்படும் ஏசி குறைந்தபட்சம் காரின் கேபினைக் குளிர்ச்சியானதாக மாற்ற அரை மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், இந்த விண்டோ ஏசியோ நொடிப்பொழுதில் காரை குளிர்ச்சியானதாக மாற்றும் வகையில் செயல்படுகின்றது. இந்த காரணத்திற்காகவே யுட்யூபர் தனது பஞ்ச் காரில் விண்டோ ஏசி-யைப் பொருத்தியிருக்கின்றார்.

நாட்டின் மலிவு விலை எஸ்யூவி கார்களில் பஞ்ச்-ம் ஒன்று. உருவம் சிறியதாக இருந்தால் இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். எம்டி மற்றும் ஏஎம்டி ஆகிய இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை எஞ்ஜின் தேர்வில் மட்டுமே பஞ்ச் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டர்போசார்ஜட் மற்றும் சிஎன்ஜி மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரெவோட்ராந் மோட்டார் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமாதிரியான அதீத பாதுகாப்பு அம்சங்களின் காரணமாக டாடா பஞ்ச் தற்போது ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெற்றிருக்கின்றது.

இதன் வாயிலாக இந்தியாவின் அதீத பாதுகாப்பு வசதிக் கொண்ட வாகனமாக பஞ்ச் காட்சியளிக்கின்றது. இதுமாதிரியான காரணங்களினாலேயே இக்கார் தற்போது சந்தையில் வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய வாகனத்தையே யுட்யூர் விண்டோ ஏசி உடன் மாடிஃபை செய்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








