டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! இந்தியால புரட்சியை ஏற்படுத்த போகுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் வெகு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tiago EV), டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tigor EV) மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Nexon EV) ஆகியவற்றை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 4வது எலெக்ட்ரிக் காராக இது இருக்கும்.

டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு இருக்கும்? என்ற கேள்வி தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் எழுந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லைன்-அப்பில் டிகோர் எலெக்ட்ரிக் காருக்கு மேலாகவும், நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு கீழாகவும் பன்ச் எலெக்ட்ரிக் கார் நிலைநிறுத்தப்படவுள்ளது. எனவே இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கு இடைப்பட்ட விலையில் பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.75 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மறுபக்கம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 17.50 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலைக்கு டாடா பன்ச் மிகவும் சிறப்பான ஒரு எலெக்ட்ரிக் காராக இருக்கும். ஸ்டாண்டர்டு வெர்ஷன் மற்றும் லாங் ரேஞ்ச் வெர்ஷன் என 2 வகையான பேட்டரி ஆப்ஷன்களுடன் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்டாண்டர்டு வெர்ஷனில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள 26 kWh பேட்டரி தொகுப்பு மற்றும் 75 பிஎஸ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம்.
இதன் ரேஞ்ச் (ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) 300 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் வெர்ஷனில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள 30.2 kWh பேட்டரி தொகுப்பும், 129 பிஎஸ் எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்படலாம். இதன் ரேஞ்ச் 350 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை பற்றி நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள விலை, பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் ப்ரைம் (Prime) வேரியண்ட் உடையது ஆகும்.
ப்ரைம் தவிர, மேக்ஸ் (Max) என்ற வேரியண்ட்டிலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது. இதன் விலை அதிகம் என்பதுடன், இதில் பொருத்தப்பட்டிருப்பது பெரிய பேட்டரி ஆகும். இதற்கிடையே டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது. 7.0 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கலாம்.
இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளையும் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கலாம். அத்துடன் ரியர் வியூ கேமரா வசதியும் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஞ்ச், வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் வைத்து பார்க்கையில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் எதிர்பார்க்கப்படும் விலை சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விலைக்கு வந்தால், டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிக்கலாம்.
டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார், இதே விலையிலோ அல்லது இதைக்காட்டிலும் குறைவான விலையிலோதான் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் மீதான ஆவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து 2023ம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








