பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டதா டாடா? காசை மிச்சப்படுத்த முக்கியமான பாகத்தை அகற்றியது...
டாடா நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரில் உள்ள இன்ஜின் டாப் கவரை சில வேரியன்ட்களில் மட்டும் அகற்றியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பிற்குப் பெயர் போனது. அந்நிறுவனத்திலேயே அதிகமாக விற்பனையாகும் கார் நெக்ஸான் கார் தான்.இந்த கார் அறிமுகமானதிலிருந்தே அதிகமாக கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது. நெக்ஸானின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு டாடா நிறுவனம் நெக்ஸான் காரில் இவி வெர்ஷனை அறிமுகப்படுத்தியது.

நெக்ஸான் கார் அறிமுகமான புதிதிலிருந்து இந்த கார் விபத்தில் சிக்கிய பல தருணங்களில் இதன் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக காருக்குள் இருந்த பயணிகள் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர். இந்த சம்பவங்கள் எல்லாம் வெளியில் தெரியத் துவங்கிய பின்பு பலர் பாதுகாப்பு என்ற விஷயத்திற்காகவே நெக்ஸானை தேர்வு செய்யத் துவங்கினர். இதில் டாடா இவி கார்களை நெக்ஸானில் அறிமுகப்படுத்திய பின்பு பலர் குஷியாகினர். இன்று நெக்ஸான் இவி கார்களும் நல்ல விற்பனையைப் பெற்று வருகிறது.

பொதுவாக பிரிமியம் கார்களில் பானட்டிற்குள் இன்ஜினை கவர் செய்யும் வகையில் இன்ஜின் கவர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது காருக்கு பல விதமான நன்மைகளைத் தருகிறது. காரின் இன்ஜினிற்குள் தூசு படாமல் இருப்பது காரின், காரின் இன்ஜின் சத்தம் மற்றும் வைப்ரேஷன்களை குறைப்பது, காரின் இன்ஜினில் உருவாகும் ஹீட் காரின் மற்ற பாகங்களை பாதிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் இது உதவியாக இருக்கும். நெக்ஸான் பெட்ரோல் இன்ஜின் காரில் இந்த இன்ஜின் கவர் இருந்தது.

நெக்ஸான் இதை இவி காராக கன்வெர்ட் செய்யும் போது இவி மோட்டார்களை பாதுகாக்கும் வகையில் அதற்கும் இதே இன்ஜின் கவர்களை கொடுத்திருந்தது. இந்த இன்ஜின் கவருடன் காரின் உட்புறத்தைப் பார்ப்பதற்கும் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் டாடா நிறுவனம் தனது நெக்ஸான் கார்களின் சில வேரியன்ட்களில் மட்டும் தற்போது இந்த இன்ஜின் கவரை அகற்ற முடிவு செய்துள்ளது.

இதன்படி டாடா நிறுவனம் தற்போது நெக்ஸான் இவி XM, XZ+ Jet, XZ+ மற்றும் XZ+ டார்க் எடிசன் ஆகிய வேரியன்ட்களில் இருந்த இன்ஜின் டாப் கவரை அகற்ற முடிவு செய்துள்ளது.
ஆனால் XZ+ Lux மற்றும் XZ+ Lux Dark ஆகிய வேரியன்ட்களில் இந்த இன்ஜின் கவர் அப்படியே தான் இருக்கிறது. அதே போல நெக்ஸான் இவி மேக்ஸ் வேரியன்டிலும் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த இவி காரில் இன்ஜன் டாப் கவர் அகற்றப்பட்டது வாடிக்கையாளர்கள் பலருக்குப் பெரிய விஷயம் இல்லை என்றாலும் இது குறிப்பிடத்தக்க ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது. இந்த இன்ஜின் கவரை அந்நிறுவனம் ஏன் அகற்றியது என்பதற்கான காரணத்தைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இது வாகனத்தை உருவாக்கும் செலவைக் குறைக்கும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது. இந்நிறுவனம் இன்ஜின் கவரை அகற்றினாலும் இந்த இன்ஜின் கவர் போல்ட் போட்டு மாட்டும் தன்மையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் டாப் கவர் மட்டும் மார்கெட்டில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் கவரை விரும்பும் வாடிக்கையாளர்கள் இதை வெளிமார்கெட்டில் வாங்கி பொருத்திக் கொள்ளலாம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்காகத் தனியாகக் காசு செலவு செய்ய வேண்டியது மட்டும் வரும்.

இந்த இன்ஜின் கவர் கொஞ்சம் பாதுகாப்பு சம்மந்தமான விஷயமாக இருந்தாலும் டாடா நிறுவனம் இந்த நெக்ஸான் இவி காரில் உள்ள இன்ஜின் கவரை அகற்றும் முடிவுக்கு வருவதற்கு முன்பு இன்ஜின் கவர் இல்லாமல் இந்த காரை இயக்கி சோதனை செய்தது. இதனால் எந்த பெரிய அளவிலான மாற்றமும் காரில் ஏற்படவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தது. மேலும் பாதுகாப்பு விஷயம் என்றால் கம்பஷன் இன்ஜின் அதிகம் சூடாகும். ஆனால் எலெக்ட்ரிக் மோட்டார் அதை விடக் குறைவான சூடே ஆகும் என்பதால் இவி கார்களுக்கு இது தேவையும் இல்லை.

இந்த காரின் இன்ஜின் கவரை அகற்றிவிட்டு நடந்த சோதனையில் காரின் ஃபெர்பாமென்ஸ்,பாதுகாப்பு மற்றும் டிரைவிங் எக்ஸ்பிரியன்ஸ் ஆகிய விஷயங்களில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் இந்த முடிவை எடுக்கப்பட்டது. பலர் இந்த முடிவை டாடா நிறுவனம் எடுத்ததும் இதனால் நெக்ஸான் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பு வருகின்றனர். இதனால் காரின் விலை எல்லாம் குறைக்கப்படவில்லை.

மாறாக டாடா நிறுவனம் தனது எல்லா பயணிகள் வாகனங்களின் விலையையும் 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட விலை இன்று (நவ.7ம் தேதி) விற்பனைக்கு அறிமுகமானது. இந்த இன்ஜின் கவர் பொருத்துவதால் வரும் செலவை டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் டாப் வேரியன்ட்களில் இந்த இன்ஜின் கவர் உடனேயே இந்த கார் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications